This Article is From Jul 31, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஜூலை 30 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

இன்று முன்னெப்போதும் இல்லாத அளவாக 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 3,838 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 57,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஜூலை 30 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

ஹைலைட்ஸ்

  • ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,78,178
  • இன்று முன்னெப்போதும் இல்லாத அளவாக 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
  • தற்போது 57,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2.39 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 61,202 மாதிரிகளில் 5,864 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 7வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் அதிகமாக தொற்று பாதிப்பு பதிவாகி வந்த நிலையில் இன்று பாதிப்பு 5,864 ஆக குறைந்துள்ளது. அதே போல பரிசோதனை எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 2,39,978 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,295 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,78,178 ஆக அதிகரித்துள்ளது. இன்று முன்னெப்போதும் இல்லாத அளவாக 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 3,838 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 57,962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் 27வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,864 பேரில் 1,175 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 98,767 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,092 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 17

செங்கல்பட்டு - 354

சென்னை -1,1175

கோவை - 303

கடலூர் - 141

தர்மபுரி - 16

திண்டுக்கல் - 138

ஈரோடு -12

கள்ளக்குறிச்சி - 93

காஞ்சிபுரம் - 175

கன்னியாகுமரி - 248

கரூர் - 41

கிருஷ்ணகிரி - 26

மதுரை - 220

நாகை - 28

நாமக்கல் - 48

நீலகிரி - 33

பெரம்பலூர் - 27

புதுக்கோட்டை - 128

ராமநாதபுரம் - 46

ராணிப்பேட்டை - 272

சேலம் - 70

சிவகங்கை - 75

தென்காசி - 56

தஞ்சை - 97

தேனி - 261

திருப்பத்தூர் - 50

திருவள்ளூர் - 325

திருவண்ணாமலை - 187

திருவாரூர் - 4

தூத்துக்குடி - 220

திருநெல்வேலி - 277

திருப்பூர் - 32

 திருச்சி - 118

வேலூர் - 184

விழுப்புரம் - 95

விருதுநகர் - 244

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 914

செங்கல்பட்டு - 14,197

சென்னை - 98,767

கோவை - 4,647

கடலூர் - 2,629

தர்மபுரி - 765

திண்டுக்கல் - 2,760

ஈரோடு - 690

கள்ளக்குறிச்சி - 3,726

காஞ்சிபுரம் - 8,604

கன்னியாகுமரி - 4,523

கரூர் - 469

கிருஷ்ணகிரி - 950

மதுரை - 10,838

நாகை - 685

நாமக்கல் - 652

நீலகிரி - 768

பெரம்பலூர் - 422

புதுக்கோட்டை - 2,054

ராமநாதபுரம் - 3,215

ராணிப்பேட்டை - 4,769

சேலம் - 3,498

சிவகங்கை - 2,301

தென்காசி - 1,968

தஞ்சை - 2,651

தேனி - 4,729

திருப்பத்தூர் - 1,099

திருவள்ளூர் - 13,481

திருவண்ணாமலை - 6,010

திருவாரூர் - 1,665

தூத்துக்குடி - 6,812

திருநெல்வேலி - 5,002

திருப்பூர் - 827

 திருச்சி - 4,011

வேலூர் - 5,677

விழுப்புரம் - 3,594

விருதுநகர் - 7,502

.