தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 1.80 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 50,055 நபர்களில் 4,965 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1,80,643 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 4,894 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,26,670 ஆக அதிகரித்துள்ளது. இன்று 75 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 2,626 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 51,344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் 18வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 4,965 பேரில் 1,130 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 88,377 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1,475 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக ஜூலை 21 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:
இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்
அரியலூர் - 37
செங்கல்பட்டு -256
சென்னை -1,130
கோவை - 176
கடலூர் - 58
தர்மபுரி - 6
திண்டுக்கல் - 45
ஈரோடு -3
கள்ளக்குறிச்சி - 47
காஞ்சிபுரம் - 262
கன்னியாகுமரி - 159
கரூர் - 24
கிருஷ்ணகிரி - 37
மதுரை - 158
நாகை - 42
நாமக்கல் - 12
நீலகிரி - 2
பெரம்பலூர் - 12
புதுக்கோட்டை - 40
ராமநாதபுரம் - 78
ராணிப்பேட்டை - 173
சேலம் - 85
சிவகங்கை - 77
தென்காசி - 54
தஞ்சை - 71
தேனி - 131
திருப்பத்தூர் - 37
திருவள்ளூர் - 366
திருவண்ணாமலை - 163
திருவாரூர் - 73
தூத்துக்குடி - 269
திருநெல்வேலி - 77
திருப்பூர் - 34
திருச்சி - 127
வேலூர் - 160
விழுப்புரம் - 97
விருதுநகர் - 360
மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:
அரியலூர் - 684
செங்கல்பட்டு - 10,289
சென்னை - 88,377
கோவை - 2,359
கடலூர் - 1,921
தர்மபுரி - 488
திண்டுக்கல் - 1,725
ஈரோடு - 512
கள்ளக்குறிச்சி - 2,435
காஞ்சிபுரம் - 5,362
கன்னியாகுமரி - 2,568
கரூர் - 293
கிருஷ்ணகிரி - 451
மதுரை - 8,517
நாகை - 466
நாமக்கல் - 353
நீலகிரி - 516
பெரம்பலூர் - 233
புதுக்கோட்டை - 1,127
ராமநாதபுரம் - 2,603
ராணிப்பேட்டை - 2,370
சேலம் - 2,459
சிவகங்கை - 1,687
தென்காசி - 1,259
தஞ்சை - 1,316
தேனி - 2,732
திருப்பத்தூர் - 599
திருவள்ளூர் - 9,774
திருவண்ணாமலை - 4,233
திருவாரூர் - 1,014
தூத்துக்குடி - 3,914
திருநெல்வேலி - 2,851
திருப்பூர் - 541
திருச்சி - 2,470
வேலூர் - 4,226
விழுப்புரம் - 2,396
விருதுநகர் - 3,924