This Article is From Jul 16, 2020

தமிழகத்தில் 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு - எப்படி தெரிந்து கொள்வது?

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.

Advertisement
தமிழ்நாடு Written by

தனித் தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

Highlights

  • இன்று காலை தேர்வு முடிவுகள் அறிவிக்கபட்டன
  • பிளஸ் 1 தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன
  • அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு என சொல்லப்படும் பிளஸ் 2 மற்றும் 11 ஆம் வகுப்பு என சொல்லபடும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக அரசு, ‘நடைபெற்ற மார்ச் 2020, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித் தேர்வர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மார்ச் / ஜூன் பருவத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெறாத பாடங்களை மார்ச் 2020 பருவத்தில் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் ஆகியவை தற்போது வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

Advertisement

www.dge2.tn.nic.in

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.

Advertisement

தனித் தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி / தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Advertisement