This Article is From Jun 18, 2019

'கரடியை நாய் என எண்ணினேன்' மலேசிய பாடகர்

இணையதளத்தில் இச்செய்தி பரவலாக பரவி வருகிறது. பலர் சரீத் சோபியாவை விமர்ச்சித்துள்ளனர்.

'கரடியை நாய் என எண்ணினேன்' மலேசிய பாடகர்

சோபியா இரண்டு வாரம் முன்பு அந்த கரடியை கண்டறிந்துள்ளார்

சென்ற வாரம், மலேசியாவில் சரீத் சோபியா யாசின் என்னும் பாடகர் கைது செய்யப்பட்டார். ஏன் கைது செய்யப்பட்டார் என்பது தான் விசித்திரமாக உள்ளது. நாய் என எண்ணி ஒரு கரடியை வளர்த்து வந்துள்ளார் அந்த பாடகர்.

ஆசிய ஓன் செய்தி குறிப்பில், சோபியா இரண்டு வாரம் முன்பு அந்த கரடியை கண்டறித்ததாகவும் அதனை முழு உடற்தகுதி பெற உதவுவதாக தான் எண்ணியதாக அவர் தெரிவித்தார்.

‘இரண்டு வாரம் முன்பு ரோடு ஓரம் சோர்வாக இருந்த கரடி குட்டியை கண்டேன். அது நாய் என்றே நான் எண்ணினேன்' என 27 வயதான சோபியா, கோஸ்மோவிற்கு தெரிவித்தார்.

‘கரடியை வீட்டு பிராணியாக வளர்க்க கூடாது என நான் அறிவேன். அதற்கு உதவி செய்யவே வீட்டிற்கு கொண்டு வந்தேனே தவிர அதனை வளர்க்க இல்லை' எனவும் சரீய்த் தெரிவித்தார்.

யாசின் வீட்டில் இருந்து கரடி குட்டி உதவி கேட்டு தன் தலையை வெளியே நீட்டும் வீடியோ பகிரப்பட்ட பிறகு தான் வனதுறை அதிகாரிகள் யாசினின் வீட்டில் சோதனை செய்து அந்த கரடி குட்டியை மீட்டுள்ளனர்.

இணையதளத்தில் இச்செய்தி பரவலாக பரவி வருகிறது. பலர் சரீத் சோபியாவை விமர்ச்சித்துள்ளனர்.

Click for more trending news


.