This Article is From Aug 12, 2020

கரடி குட்டிகளை வேட்டையாட வந்த ஓநாய்கள்! தாய் கரடி ஆக்ரோஷம்!! வீடியோ

தாயைப் போல பின்னங் கால்களில் நின்று பயமுறுத்த முயற்சிக்கும் கரடி குட்டிகள்

கரடி குட்டிகளை வேட்டையாட வந்த ஓநாய்கள்! தாய் கரடி ஆக்ரோஷம்!! வீடியோ

தாய் கரடி தனது குட்டிகளை காப்பாற்ற ஓநாய்களுடன் சண்டையிட துணிகிறது

இரண்டு கரடி குட்டிகளை ஓநாய்கள் ஒன்றாக சேர்ந்து துரத்துவதும், தாய் கரடி எதிர்த்து நிற்பதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா ஒன்றில் வழிகாட்டியாக இருப்பவர் டெய்லர் பிளாண்ட். இவர் ஒரு நாள் பூங்காவை வலம் வரும் போது கரடி குட்டிகளை ஓநாய்கள் துரத்துவதைக் கண்டார். அதனை வீடியோவாக எடுத்தார். இந்த வீடியோ யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ளது. 

அதில், சில ஓநாய்கள் இரண்டு கரடி குட்டிகளை துரத்துகின்றன. ஓநாய்களை கண்டு கரடி குட்டிகளும், அதன் தாய் கரடியும் ஓட, ஒரு கட்டத்தில் கரடி குட்டிகள் ஓட முடியாமல் நின்றன. அப்போது பின்னால் வந்த ஓநாய்கள், கரடி குட்டிகளை சுற்றி வளைக்கின்றன. 

இந்த நிலையில், தாய் கரடி தனது குட்டிகளை காப்பாற்ற ஓநாய்களுடன் சண்டையிட துணிகிறது. ஆக்ரோஷமாக வந்து ஒவ்வொரு ஓநாய்களையும் தாக்க முற்பட்டது. பின்னர், ஓநாய்கள் கரடி குட்டிகளை ருசி பார்க்க முடியாமல் அப்படியே அங்கிருந்து நகர்ந்து செல்கிறது.
 

மொன்டானாவின் கூற்றுப்படி,அந்த பூங்காவில் சுமார் 90 முதல் 110 ஓநாய்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வளவு ஓநாய்களும் ஒன்று சேர்ந்தால் தாய் கரடியும் தாக்கப்பட்டு விடும். 
அதிர்ஷ்டவசமாக, இந்த இடத்தில் கரடிகளிடம் இருந்து ஓநாய்கள் பின்வாங்கின.


கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டது. அப்போதிலிருந்து, இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், கமெண்ட்ஸ்களையும் பெற்று வருகிறது. 

"தாயைப் போல பின்னங் கால்களில் நின்று பயமுறுத்த முயற்சிக்கும் அந்த சிறு குட்டிகளை பாருங்கள்" என்று ஒரு பேஸ்புக் பயனர் கமெண்ட் செய்துள்ளார்.

Click for more trending news


.