This Article is From Mar 20, 2019

இந்த ஒரு விஷயத்தை தவறவிட்டால் ஒட்டுமொத்த டயட்டும் வேஸ்டுதான்!

டயட்டிங்கில் இருப்பவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காகமல் இருப்பது மிகப்பெரிய தவறாகும்.

இந்த ஒரு விஷயத்தை தவறவிட்டால் ஒட்டுமொத்த டயட்டும் வேஸ்டுதான்!

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.

ஹைலைட்ஸ்

  • தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
  • உடல் எடை குறைய அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்
  • போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் சருமம் பளபளப்பாக இருக்கும்

அன்றாட உரையாடல்களில் டயட்டிங் என்ற டாப்பிக் இல்லாமல் இருப்பதே இல்லை. சிலர் டயட்டை பின்பற்றியும் உடல் எடை அதிகரித்து பலரும் டயட்டை முற்றிலுமாக விட்டுவிடுவது வழக்கம். டயட் என்பது ஒவ்வொருவரின் இரத்தத்தின் தன்மையைப் பொறுத்து மாறுபடுகிறது. நீங்கள் லோ-கார்ப் டயட் (முற்றிலுமாக கார்ப்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தவிர்த்து விடுதல்) இருப்பவர்கள் என்றால் வாரத்தில் ஓரிரு நாள் விரதம் கூட இருக்க வேண்டியதிருக்கும். என்னவிதமான டயட் பின்பற்றினாலும் நீங்கள் இந்த ஒரு விஷயத்தை தவறவிட்டால் நிச்சயம் எந்தவொரு டயட்டும் முன்னேற்றத்தைக் கொடுக்காது. அந்த தவறு போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதுதான்.

டயட்டிங்கில் இருப்பவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காகமல் இருப்பது மிகப்பெரிய தவறாகும். 

சில உணவுகளை முற்றிலுமாக தவிர்க்கக்கூடிய டயட்டில் இருப்பவர்களின் உடல் மிக எளிதாக நீர்ச்சத்து வற்றிவிடும். உங்களுக்கு அளவுக்கு அதிகமாக தாகமாக இருந்தால் உங்கள் உடல் தண்ணீர்ச் சத்து இழந்து விட்டதற்கான அறிகுறியாகும். டயட்டில் இருக்கும் போது தாகம் அதிகமாகும் உணர்வைக் கூட பசியெனத் தவறாக எண்ணத் தோன்றும். அதற்குத் தேவை ஸ்நாக்ஸ் அல்ல ஒரு கிளாஸ் தண்ணீர் போதுமானது.

உடலுக்கு தேவையான போதுமான தண்ணீரைக் குடிக்கும் பொழுது வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இது உடல் எடை குறைக்க உதவுகிறது. உடல் எடை குறைய பல காரணிகள் தேவை. அன்றாடம் உடற்பயிற்சி செய்தல்,மன அழுத்தம் இல்லா வாழ்வு, அன்றாடம் உடலுக்கு தேவையான கலோரிகளை ஆரோக்கியமான டயட் மூலம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

tvglb5ao

போதுமான அளவு தண்ணீர் குடித்தால் உடல் எடை குறைகிறது. பொரித்த உணவுகள் அல்லது ஜங்க் புட்களை சாப்பிடும் உணர்வுகளையும் குறைக்கிறது. தண்ணீர் குடிப்பதால் ஆரோக்கியமான, பளபளப்பான சருமம் கிடைக்கிறது. வளர்சிதை மாற்றம் சிறப்பாக செயல்படும், சிறுநீரகத்திற்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. மாதவிடாய் தவறாது இருக்கும். தசைப் பிடிப்பு ஏதும் ஏற்படாது.காய்ச்சல், தலைவலி மற்றும் மூளையும் ஆரோக்கியமாக இருக்கும்.  

உடல் எடை குறைய தண்ணீர் குடிக்கும் அளவை எப்படி அதிகப்படுத்துவது
1. எப்போதும் வெளியே செல்லும் போது தண்ணீர் கேனை எடுத்துச் செல்வதும் அவசியம்.

2. குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிக்க அலாரம் அல்லது ரிமைண்டர் வைத்தோ குடிப்பது நல்லது.\

3.அதிக தண்ணீர் சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. வெள்ளரிக்காய், தர்பூசணிப்பழம், லெட்யூஸ், முள்ளங்கி, பால், கீரைகள், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரிஸ் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

4. எப்போதெல்லாம் பசி எடுக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது. தாகமாக இருந்தால் தணிந்து விடும் அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிடத் தோன்றுகிற எண்ணத்தையும் உடனே மாற்றி விடும். 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

.