This Article is From Mar 19, 2019

உடல் எடை குறைக்க 14 நிமிட உடற்பயிற்சி...! வீடியோ உள்ளே

This workout can be done at home and requires no equipment. So don't you worry about a hefty gym fees even before you start with exercising this summer. Get summer-ready with these 8 effective exercises for weight loss.

உடல் எடை குறைக்க 14 நிமிட உடற்பயிற்சி...! வீடியோ உள்ளே

உடற்பயிற்சியினால் உடல் எடை குறைப்பது ஆரோக்கியமானது

ஹைலைட்ஸ்

  • கோடைக் காலத்தில் உடற்பயிற்சியைத் தொடங்குங்கள்
  • 14 நிமிட தீவிர உடற்பயிற்சி கலோரிகளை எரித்து விடும்.
  • கோடைக்காலத்தில் உடலில் தண்ணீர் வற்றாமல் வைத்துக் கொள்ளுங்கள்

கோடைக்காலம் வந்து விட்டது. வெயிலுக்கு பயந்து ஓடினாலும் உடற்பயிற்சிக்கு விடுமுறை கொடுத்து விட முடியாது. குளிர்காலம் முடிந்து விட்டது. குளிருக்கு இதமாக வெதுவெதுப்பான உணவுகளை சாப்பிட்டு  ஏறியிருக்கும் உடலை உடற்பயிற்சி செய்து குறைக்க வேண்டிய காலம் வந்து விட்டது. வெயில் காலத்தில் உங்களின் உடல் நல்ல ஃபிட்டாக இருப்பது மிகவும் அவசியம். ஆரோக்கியமான உணவு முறையும் உடற்பயிற்சியும் அழகான கட்டான உடற்கட்டை உங்களுக்கு கொடுக்கும். வெயிலினால் உடற் சூட்டை தவிர்த்து நல்ல செரிமானத்தை பெறுவது மிகவும் அவசியம்.

இந்த கட்டுரை தீவிரமான 14 நிமிடம் உடற்பயிற்சியை செய்முறையை உங்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. பிரபலங்களின் ஃபிட்னஸ் ட்ரைனராக இருக்கும் கயிலா இட்சின்ஸ் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த உடற்பயிற்சியை செய்ய எந்தவொரு உபகரணமும் தேவையில்லை. அதனால் ஜிம்முக்கு கொடுக்க வேண்டிய பணச் செலவைப் பற்றி கவலைப் படவேண்டியதில்லை. இந்த கோடைக் காலத்தை உடற்பயிற்சியுடன் தொடங்குங்கள். பல உடற்பயிற்சிகள் இதயத்திற்கு மற்றும் உடலை வலுவூட்டவும் செய்யக் கூடியதாக உள்ளது. இதை எளிதாக வீட்டிலே இருந்து பயிற்சியை மேற்கொள்ளலாம். உங்களின் மன உறுதிதான் இதில் முக்கியமே தவிர இதற்கு வேறெதும் அவசியமில்லை. 

 

உடல் எடை குறைய : 14 நிமிடம் செய்ய வேண்டிய உடல் முழுமைக்குமான உடற்பயிற்சி இந்தக் கோடை காலத்தில் மிகவும் தேவையானது. 

1. உட்கார்ந்து எழுவது -15 முறை

2. பர்பீஸ் :10 முறை

3. புஸ்-அப்ஸ் : 10 முறை

4. டோய் -டாப்ஸ் : 15 முறை

5. குதித்து தாவுதல் : 12 முறை

6. சுமோ குவாட் :15 முறை

7. சிட் -அப்ஸ் :15 முறை

8. ஸ்கிப்பிங் -15 முறை

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KAYLA ITSINES (@kayla_itsines) on

நேரத்தை பொருத்தி வைத்து 14 நிமிடங்களில் எத்தனை முறை செய்ய முடிகிறது என்பதை முயற்சித்து பாருங்கள் என்று கயிலா தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். கால் முதல் தோள் வரை தொடைப் பகுதி மேலுடலுக்கு என 8 உடற்பயிற்சிகள் உடலின் கலோரிகளை வெகுவாகு எரித்துவிடும். இதை அன்றாடம் செய்து  ஆரோக்கியமான உணவு முறைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

அதிகளவு கொழுப்பு, சுத்திகரிக்கப்பட்ட கார்ப்போஹைட்ரேட்கள் ஆகியவற்றை தவிர்த்து விட வேண்டும். புரதச் சத்து அதிகமுள்ள உணவுகளான முட்டை, கொட்டை வகைகள் மற்றும் விதைகள், சிக்கன், சோயா, பீன்ஸ், பருப்பு வகைகள் ஆகியவை சேர்த்துக் கொள்வது நல்லது. நார்ச்சத்து உள்ள ஓட்ஸ், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். தண்ணீர் அதிகமுள்ள தர்பூசணிப் பழம், வெள்ளரிக்காய்ம் லெட்யூஸ், ஸ்ட்ராபெர்ரி, பால், முள்ளங்கி மற்றும் வாழைப்பழத்தை சாப்பிடுவது மிகவும் அவசியம். 

 

பாஸ்தா,பொரித்த உணவுகள், ஜங்க் புட்ஸ், பிராசஸ் ஃபுட், ஆல்கஹால் எடுத்துக் கொள்வது, புகைப்பிடிப்பது ஆகியவற்றை உங்களின் அன்றாட பழக்கத்திலிருந்து நீக்கிக் கொள்வது. கூடுதல்  ஆரோக்கியத்தை சேர்க்கும். கோடையைக் கொண்டாடுங்கள்.

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

.