கார்போஹைட்ரேட் உணவுகளை எப்படி தவிர்க்கலாம்?

தினசரி உணவில் முட்டை, இறைச்சி, நட்ஸ், சீஸ், க்ரீக் யோகர்ட் அல்லது காட்டேஜ் சீஸ் ஆகியவற்றை சேர்த்து கொள்ளலாம். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
கார்போஹைட்ரேட் உணவுகளை எப்படி தவிர்க்கலாம்?

ஹைலைட்ஸ்

  1. நாம் சாப்பிடக்கூடிய அனைத்து உணவுகளிலுமே கார்போஹைட்ரேட் இருக்கிறது.
  2. ப்ரெட் ரெசிபிகளை தவிர்ப்பது நல்லது.
  3. காட்டேஜ் சீஸ், நட்ஸ் ஆகியவற்றை தினசரி சாப்பிட்டு வரலாம்.

உடல் எடை குறைக்க லோ-கார்ப் டயட்டை பின்பற்றுவதே சிறந்தது.  கார்போஹைட்ரேட்டை தவிர்ப்பதால், புரதம் மற்றும் கொழுப்பு சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அதிகரிக்கும்.  உடல் எடை குறைப்பதற்கு மட்டுமல்லாது உடலுக்கு ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் வழங்கும் தன்மை கொண்டது லோ-கார்ப் டயட்.  ஆனால் நாம் சாப்பிடக்கூடிய பெரும்பாலான உணவுகளில் கார்போஹைட்ரேட்டின் அளவுதான் அதிகமாக இருக்கிறதென்பதால் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்துதான் சாப்பிட வேண்டும்.  கார்போஹைட்ரேட் உணவுகளை எப்படி தவிர்ப்பது அல்லது குறைப்பது என்பது குறித்துதான் இந்த கட்டுரை.  

ப்ரெட்: 

ஃப்ரெஞ்சு டோஸ்ட் தொடங்கி சாண்ட்விச் வரை ப்ரெட்டின் பயன்பாடு அதிகமாக உள்ளது.  கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளுள் ப்ரெட்டும் ஒன்று.  ஒரு ஸ்லைஸ் ப்ரெட்டில் 15 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.  நம்மில் பலரும் காலை, மாலை அல்லது பசி நேரத்தில் ப்ரெட் ஆம்லெட், சாண்ட்விச், டோஸ்ட் என ப்ரெட் உணவுகளை உட்கொள்வோம்.  இவற்றிற்கு பதிலாக புரதம் நிறைந்த வேறு உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.  

காலை உணவு: 

நாள் ஒன்றிற்கான ஆற்றலை கொடுக்கக்கூடியது காலை உணவு.  காலை உணவை முடிந்தவரை ஆரோக்கியமானதாக்க வேண்டும்.  நமக்கு தெரியாமலேயே கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை நாம் அன்றாடம் எடுத்து கொண்டிருப்போம்.  இனி நீங்கள் சாப்பிடக்கூடிய உணவின்மீது கவனம் செலுத்துங்கள்.  முட்டையில் வெறும் ஒரு கிராம் அளவே கார்போஹைட்ரேட் இருக்கிறது.  தவிர புரதம் மற்றும் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கிறது.  இதனை காலை உணவாக எடுத்து கொண்டால் மிகவும் நல்லது.  

h4kf24tg

புரதம்: 

தினசரி உணவில் முட்டை, இறைச்சி, நட்ஸ், சீஸ், க்ரீக் யோகர்ட் அல்லது காட்டேஜ் சீஸ் ஆகியவற்றை சேர்த்து கொள்ளலாம்.  இவற்றில் புரதம் அதிகமாக இருப்பதால் உடலில் புரத தேவையை பூர்த்தி செய்வதுடன் ஆற்றலையும் அதிகரிக்கிறது.  மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்து உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.  

உணவு பொருட்கள்: 

நாம் சாப்பிடுவதற்காக எப்படிப்பட்ட உணவுகளை வாங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.  மார்கெட்களில் கிடைக்கக்கூடிய உணவுகளை குருட்டுத்தனமாக வாங்கக்கூடாது.  அதில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிளை படித்து பார்த்து வாங்க வேண்டும்.  எல்லா உணவுகளிலுமே அந்த உணவில் என்ன சத்துக்கள் எவ்வளவு விகிதத்தில் இருக்கிறது என்றும் அதன் கலோரிகள் என்னவென்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.  இவற்றை படித்து பார்த்து கவனமாக தேர்வு செய்ய வேண்டும். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................