This Article is From Aug 21, 2018

கேரளாவுக்கு சமைக்கப்பட்ட உணவும், மருத்துவர்களும் தேவை - அமைச்சர் கோரிக்கை: 10 தகவல்கள்

நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் கொச்சி துறைமுகத்துக்கு வந்த வண்ணம் உள்ளன

Kochi:

மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் அடிப்படை வசதிகளை திரும்ப கொண்டு வரும் வேலைகளும், மீட்புப் பணிகளும் ஒரே நேரத்தில் நடந்து வருகின்றன. ஆலப்புழாவில் இருக்கும் செங்கனூரில் இன்னும் 1000 பேராவது வெள்ளத்தில் சிக்கி இருப்பர் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 90 சதவிகித மாநிலத்தில் போன் சேவை மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வெள்ள நீர் வடியத் தொடங்கி இருந்தாலும், சுத்தமான குடிநீருக்கு மக்கள் அவதிப்படுவர் என்று சொல்லப்படுகிறது. அதேபோல கொசுத் தொல்லையும் மக்களை வாட்டி எடுக்கும் எனப்படுகிறது. கொச்சியும் திருவணந்தபுரமும் இந்த விஷயங்களில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. கேரள வெள்ளம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், ‘மிக மோசமான பேரழிவு’ என்று கருத்து தெரிவித்துள்ளது.

10 ஃபேக்ட்ஸ்:

1. ‘ஆகஸ்ட் 8 முதல் 20 ஆம் தேதி வரை 223 பேர் மழை காரணமாக இறந்துள்ளனர். திங்களன்று மட்டும் 6 பேர் பலியாகியுள்ளனர். மத்திய அரசு, எங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகச் சொல்லியுள்ளது’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

2. ‘நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீட்பு நடவடிக்கைகளை முடிக்கப் பார்க்கிறோம். இனி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்துவோம். இன்றைய நாள் இறுதிக்குள் பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்டு விடுவோம் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று கேரள வருவாய் துறை அமைச்சர் சந்திரசேகரன் தகவல் தெரிவித்துள்ளார். 

3. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் கொச்சி துறைமுகத்துக்கு வந்த வண்ணம் உள்ளன. 

4. கேரளாவின் மின்சாரத் துறை மற்றும் தண்ணீர் துறை மாநிலத்தில் பல நாட்களாக மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்த இடங்களில் தேவையை பூர்த்தி செய்ய முனைந்துள்ளன.

5. கொச்சியில் இருக்கும் கடற்படை தளத்தில் இருந்து சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், எர்ணாகுளம் - திருவணந்தரபுரம் இடையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

6. ஏர் இந்தியாவின் ஏர் அலையன்ஸ் சிறிய ரக விமானம் நேற்று கொச்சி கடற்படை விமான தளத்திற்கு வந்தது. 70 இருக்கைகள் கொண்ட அந்த விமானம் கொச்சியிலிருந்து பெங்களூருவுக்குப் புறப்பட்ட போது, அனைத்து சீட்களும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன.

7. மாநிலத்தில் இருக்கும் 77,000 முதல் 85,000 மொபைல் டவர்கள் வரை சரி செய்யப்பட்டுவிட்டன. இடுக்கி மாவட்டத்தில் தான் நிலைமையை சீராக்க முடியவில்லை. மேலும், 12,000 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் தேவையான அளவுக்கு எல்.பி.ஜி சிலிண்டர்களும் வந்துள்ளன.

8. நீர் வடியத் தொடங்கியுள்ளதை அடுத்து, இறந்த மிருகங்கள் மற்றும் சுத்தமான குடிநீர் கிடைக்காமை உள்ளிட்டவையால் தொற்று நோய் பரவும் அபாயம் மிக அதிகமாக உள்ளது. இதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மாநிலம் முழுவதும் 3,700 மருத்துவ முகாம்களை அமைத்துள்ளது. மேலும், 6 சிறப்பு மருத்துவக் குழுக்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது.

9. திருச்சூர் மற்றும் செங்கனூர் தான் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இன்னும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கவும், மீட்புப் படை போராடி வருகிறது. 

10. ட்ரோன் மூலமும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

 

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. கேரளா மீண்டெழ வேண்டும். பல நூறு பேர் இறந்துள்ளனர். பல லட்சம் பேர் வீடில்லாமல் தவித்து வருகின்றனர். நீங்கள் எப்படி உதவி செய்யலாம் தெரியுமா?

.