This Article is From Mar 23, 2019

நெருங்கும் லோக்சபா தேர்தல்; ட்விட்டரில் என்ட்ரி கொடுத்த தேர்தல் ஆணையம்!

@ECISVEEP என்ற பெயரில் தேர்தல் ஆணையம் ஆரம்பித்துள்ள ட்விட்டர் கணக்கின் மூலம், தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிகிறது. 

நெருங்கும் லோக்சபா தேர்தல்; ட்விட்டரில் என்ட்ரி கொடுத்த தேர்தல் ஆணையம்!

இது குறித்து ட்விட்டர் நிறுவனம், ‘தேர்தல் ஆணையத்தை ட்விட்டர் தளத்துக்கு வரவேற்கின்றோம்’ என்று செய்திக் குறிப்பு மூலம் கூறியுள்ளது. 

New Delhi:

மக்களவைத் தேர்தல் வர இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம், ட்விட்டர் சமூக வலைதளத்தில் கணக்கை ஆரம்பித்துள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி, ட்விட்டர் நிறுவனம், சிறப்பு இமோஜிக்களை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்திய நாடாளுமன்றத்தை பிரதிபலிக்கும் வகையில் ட்விட்டர் நிறுவனம் இமோஜி ஒன்றை உருவாக்கியுள்ளது. தேர்தல் குறித்து மக்கள் கலந்துரையாட வேண்டும் என்ற நோக்கிலும், தேர்தலில் அதிக பேர் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கிலும் ட்விட்டர் இந்த சிறப்பு இமோஜி உருவாக்கியுள்ளதாக தெரிகிறது. 

@ECISVEEP என்ற பெயரில் தேர்தல் ஆணையம் ஆரம்பித்துள்ள ட்விட்டர் கணக்கின் மூலம், தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிகிறது. 

இது குறித்து ட்விட்டர் நிறுவனம், ‘தேர்தல் ஆணையத்தை ட்விட்டர் தளத்துக்கு வரவேற்கின்றோம்' என்று செய்திக் குறிப்பு மூலம் கூறியுள்ளது. 

ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி மகிமா கவுல் இது குறித்து மேலும் கூறுகையில், ‘இந்தியாதான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. எதிர்வரும் தேர்தல் ட்விட்டர் நிறுவனத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். கடந்த பல மாதங்களாக ட்விட்டர் தளத்தில் மிகவும் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் தகவல்கள் பரிமாறப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். தற்போது தேர்தல் ஆணையம், ட்விட்டர் தளத்தை பயன்படுத்த உள்ளது குறித்து நாங்கள் கவுரப்படுகிறோம். இதன் மூலம் வாக்காளர்களுக்கு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். நாட்டு மக்கள், தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்திலிருந்து மிகவும் முக்கியமான செய்திகளைப் பெறுவர்' என்று விளக்கியுள்ளார்.

.