This Article is From May 12, 2020

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை நடத்தப்படும்:அமைச்சர் செங்கோட்டையன்

முழு முடக்க நடவடிக்கை காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் திறப்பது குறித்த நிருபர்களின் கேள்விக்கு, “பள்ளிகள் திறக்கப்படுவது குறித்தது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை“ என அமைச்சர் தெரிவித்தார்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை நடத்தப்படும்:அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கையின் காரணமாக அணைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்துகள் உட்பட அனைத்து அத்தியாவசியமற்ற சேவைகளும் முடக்கப்பட்டன. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் வருகிற ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை நடத்தப்படும் என மாநில பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதே போல ஒத்திவைக்கப்பட்ட +1 தேர்வுகள், ஜூன் 2  முதல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

முழு முடக்க நடவடிக்கை காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் திறப்பது குறித்த நிருபர்களின் கேள்விக்கு, “பள்ளிகள் திறக்கப்படுவது குறித்தது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை“ என அமைச்சர் தெரிவித்தார். அதேபோல தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அனைத்து பாதுகாப்பு முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், பேருந்து வசதி இல்லாததால் மார்ச் 24 அன்று தேர்வு எழுதாத 12ம் வகுப்பை சேர்ந்த 36,842 மாணவர்களுக்கு ஜூன் 4 அன்று தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

.