This Article is From Feb 04, 2020

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன்!

Tanjore Big Temple Kudamuzhukku: "எந்த மந்திரங்கள், எங்கேங்கே சொல்லப்படும் என்பதையும் அரசு சார்பில் தெளிவுபடுத்தியுள்ளோம்"

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன்!

Tanjore Big Temple Kudamuzhukku: "தமிழுக்கும் சமஸ்கிரத்துக்கும் ஒரே மாதிரி அந்தஸ்து என்பதைத் தாண்டியும்..."

Tanjore Big Temple Kudamuzhukku: தஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 5-ம்தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதில் சமஸ்கிரதத்தில் மட்டுமே மந்திரங்கள் சொல்லப்படும் என்று சொல்லப்பட்டது. இதற்கு தமிழ் அமைப்புகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர் கட்டிய கோயிலில் தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தின. 

இதனால், தமிழக அரசு, தமிழ் மற்றும் சமஸ்கிரதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனால், பிரச்னை சற்றுத் தணிந்துள்ளது. 

.com/2018 12/
 thanjavur

இந்நிலையில் மாநில தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “கர்ப்ப கிரகம், யாக சாலை, கோயில் மேலே இருக்கும் கலசத்திற்கான பூசைகள் அனைத்திலும் தமிழ் மற்றும் சமஸ்கிரத்தில் மந்திரங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள் சொல்லப்படும் என்பதை தெளிவாக சொல்லிவிட்டோம். 

எந்த மந்திரங்கள், எங்கேங்கே சொல்லப்படும் என்பதையும் அரசு சார்பில் தெளிவுபடுத்தியுள்ளோம். தமிழுக்கும் சமஸ்கிரத்துக்கும் ஒரே மாதிரி அந்தஸ்து என்பதைத் தாண்டியும், தமிழ் மொழிக்கே முதன்மை இடம் கொடுக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார். 
 

.