
ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்
RRB NTPC உள்ளிட்ட நிலுவையில் உள்ள மற்ற பணி நியமனங்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையில் மாபெரும் வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட 35,208 பணியிடங்கள் தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், கடைசி வரையில் தேர்வுகள் நடைபெறாமலே போனது. இதேபோல் இன்னும் பிற தேர்வுகளும் நடைபெறாமல் இருந்தது. ஒட்டுமொத்தமாக சுமார் 3 கோடி பேர் RRB NTPC குரூப் டி உள்ளிட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த நிலையில், இந்தாண்டு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் RRB NTPC உள்ளிட்ட நிலுவையில் உள்ள தேர்வுகள் நடைபெறும் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ளார்.
அதில், 15 டிசம்பர் 2020 முதல் 1,40,640 காலியிடங்களுக்கான முதனிலை கணினி வழித்தேர்வு நடைபெறும் என்று கூறியுள்ளார். மேலும், 3 வகையிலான காலியிடங்கள் உள்ளதாகவும், அவை, NTPC எனப்படும் கார்ட்ஸ், கிளார்க் உள்ளிட்ட தொழில்நுட்பம் அல்லாத பணிகள், தொழிலகப் பிரிவுகளுக்கான பணிகள், லெவல் 1 பணிகள் ஆகும் என்று கூறியுள்ளார்.
ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதவிட்ட டுவிட்:
Railways to start Computer Based Test for notified 1,40,640 vacancies from 15th December 2020 ????️
— Piyush Goyal (@PiyushGoyal) September 5, 2020
Vacancies are of 3 types:
???? Non Technical Popular Categories(guards, clerks etc)
???? Isolated & Ministerial
???? Level 1(track maintainers, pointsman etc)
???? https://t.co/T4VxTaR9wE
இதே போல் வாரியத் தலைவர் விகே யாதவ் காணொளி காட்சி வாயிலாக NTPC தேர்வுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக RRB NTPC தேர்வுகளுக்கான அறிவிக்கை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.