This Article is From Jun 29, 2020

தமிழகத்தில் பருவமழை: இந்த 6 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் அகரம் சீகூர் மற்றும் விழுப்புரத்தின் வல்லம் பகுதிகளில் தலா 12 சென்டி மீட்டர் மழை பெய்தது

தமிழகத்தில் பருவமழை: இந்த 6 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை!

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது
  • பருவமழைக் காலம் என்பதால் மேற்கு மாவட்டங்களில் நல்ல மழை பெய்கிறது
  • தமிழக தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்கிறது

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம், “தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும்,

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் அகரம் சீகூர் மற்றும் விழுப்புரத்தின் வல்லம் பகுதிகளில் தலா 12 சென்டி மீட்டர் மழை பெய்தது,” எனத் தகவல் தெரிவித்துள்ளது. 


 

.