This Article is From Sep 17, 2019

முஸ்கான், ரித்திக் கொலை வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!

மனோகரன் மீதான வழக்கு விசாரணை கீழமை நீதிமன்றங்களில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றது. இதில் கடந்த ஆகஸ்ட் 1-ம்தேதி மனோகரனின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

முஸ்கான், ரித்திக் கொலை வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!

வெள்ளியன்று மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், அடுத்த மாதம் 16-ம்தேதி வரை தண்டனை தள்ளிப் போடப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • 2010-ல் நடந்த கோவை குழந்தைகள் இரட்டை கொலை தமிழகத்தை உலுக்கியது
  • கொலை வழக்கில் குற்றவாளி மோகன கிருஷ்ணன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்
  • வெள்ளியன்று மனோகரனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது
New Delhi:

தமிழகத்தை உலுக்கிய முஸ்கான், ரித்திக் கொலை வழக்கில் குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனையை அக்டோபர் 16-ம்தேதி வரை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் இன்னொரு குற்றவாளியான மோகன கிருஷ்ணன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோவையை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் ரஞ்சித் என்பவரது குழந்தைகள் முஸ்கான் (வயது 11), ரித்திக் (வயது 8) ஆகிய இருவரும் கடந்த 2010 அக்டோபர் 29-ம்தேதி கடத்தப்பட்டனர். பணம் கேட்டு மிரப்பட்ட நிலையில் சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக கடத்தப்பட்ட இருவரும் வாய்க்காலில் தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். 

இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த இரட்டை கொலை தொடர்பாக குழந்தைகளை வேனில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற டிரைவர் மோகன கிருஷ்ணன், அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

கொலை நடந்த பின்னர் வழக்கு விசாரணையின்போது கடந்த 2010 நவம்பர் 9-ம்தேதி, குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்தை காண்பிப்பதற்காக குற்றவாளிகள் இருவரும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது மோகன கிருஷ்ணன் தப்பிச் செல்ல முயன்றார். அவரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். 

மனோகரன் மீதான வழக்கு விசாரணை கீழமை நீதிமன்றங்களில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றது. இதில் கடந்த ஆகஸ்ட் 1-ம்தேதி மனோகரனின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 

இதன்படி வரும் வெள்ளியன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. இந்த நிலையில், மனோகரன் தரப்பு வழக்கறிஞர், கீழமை நீதிமன்றத்தில் மனோகரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் அக்டோபர் 16-ம்தேதி வரை மனோகரனை தூக்கிலிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

வெள்ளியன்று மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், அடுத்த மாதம் 16-ம்தேதி வரை தண்டனை தள்ளிப் போடப்பட்டுள்ளது. 

.