கடும் வெப்பம் காரணமாக உ.பி.யில் ரயிலில் வந்து கொண்டிருந்த தமிழர்கள் 4 பேர் உயிரிழப்பு!!

ஆக்ராவில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தபோது உத்தரப்பிரதேசத்தில் துயரச் சம்பவம் நடந்திருக்கிறது.

கடும் வெப்பம் காரணமாக உ.பி.யில் ரயிலில் வந்து கொண்டிருந்த தமிழர்கள் 4 பேர் உயிரிழப்பு!!

கேரளா எக்ஸ்ப்ரஸ் ரயிலில் பயணம் செய்த கோவையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Jhansi:

கடும் வெப்பம் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் வந்து கொண்டிருந்த தமிழர்கள் 4 பேர் உயிரிழந்தனர். அவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 

ஆக்ராவில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. கோவையை சேர்ந்த பந்தர் பழனிசாமி (80), பால கிருஷ்ண ராமசாமி (69), சின்னாரி (71), தெய்வானை (71) ஆகியோர் வாரணாசிக்கு சென்றுள்ளனர். 

திரும்பும்போது அவர்கள் கேரளா எக்ஸ்ப்ரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தனர். ரயிலில் பணம் சென்றபோது ரயில் எஸ்-8 மற்றும் எஸ்-9 ஆகிய பெட்டிகளில் இருந்தவர்கள் மூச்சு விட சிரமம் ஏற்பட்டதாக புலம்பத் தொடங்கினர். 

அதிக வெப்பம் காரணமாக அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், மயக்கமுற்ற அவர்கள் 4 பேரும் உயிரிழந்தனர். சுப்பாரய்யா (71) என்பவர் மட்டும் ஜான்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் ஜான்சி ரயில் நிலையத்திலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

More News