This Article is From Aug 08, 2020

கோழிக்கோடு விமான விபத்திற்கு காரணம் என்ன? விளக்குகிறது விமான போக்குவரத்துத்துறை!!

விபத்திற்கு உள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து 184 பேரை ஏற்றிக்கொண்டு வந்தது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோழிக்கோடு விமான விபத்திற்கு காரணம் என்ன? விளக்குகிறது விமான போக்குவரத்துத்துறை!!

கேரள விமான விபத்து: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 கோழிக்கோட்டில் தரையிறங்கிய பின்னர் இரண்டாக உடைந்தது

New Delhi:

போயிங் 737 NG வகையைச் சேர்ந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான பயணிகள் விமானம் நேற்றிரவு 7.41 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்பொழுது விபத்தில் சிக்கியது. இதில் விமானம் இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 127 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்திற்கு முன்னதாக, தரையிறங்க முயன்ற விமானம் ஓடுபாதையை தொட்ட பிறகு விபத்து நேர்ந்திருக்கலாம் என சிவில் ஏவியேஷன் ஒழுங்குமுறை இயக்குநரகம் வட்டாரங்கள் என்டிடிவிக்கு தெரிவித்துள்ளன. தரையிறங்கும் போது, ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இன்று விபத்துக்குள்ளான இடத்திற்குச் சென்ற சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங், ஓடுபாதையை தவிர்த்தும் பல இடங்களில் விமானத்தின் எரிபொருள் சிதறி இருந்ததாக கூறியுள்ளார்.

விபத்திற்கு உள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து 184 பேரை ஏற்றிக்கொண்டு வந்தது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோழிக்கோட்டில் அமைந்திருப்பது டேபிள்டாப் ஓடுதளமாகும். மலைகள் அல்லது குன்று போன்ற உயரமான பகுதிகளில் அமைந்திருக்கும் விமான ஓடுதளங்கள் டேபிள் டாப் ஓடுதளம் என அழைக்கப்படுகின்றது. குறுகிய நீளம் கொண்ட இந்த வகை ஓடுபாதைகளில் விமானத்தை தரையிறக்கவும், மேலெழுப்பவும் கைதேர்ந்த விமானிகளே பயன்படுத்தப்படுவார்கள்.

இந்நிலையில் ஓடுதளம் குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்களை இளைய வெளியுறவு அமைச்சர் வி முரளீதரன் மறுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வீட்டிற்கு அழைத்து வரும் வந்தே பாரத் மிஷனின் கீழ் மே 7 முதல் 100 விமானங்கள் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் என்டிடிவிக்கு தெரிவித்தார்.

“ஓடுபாதையின் நிலை குறித்த முந்தைய அறிக்கைகள் நேற்றைய சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று நேற்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தெளிவுபடுத்தினார். நாட்டில் எங்களிடம் இரண்டு டேப்லெட் விமான நிலையங்கள் உள்ளன, ஆனால் அந்த விமான நிலையங்கள் தொடர தகுதியானதா என்பது ஒரு பெரிய கேள்வி.” என முரளீதரன் இன்று காலை என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்குள்ளான இடத்தையும், காயமடைந்தவர்களையும் அவர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார்.

.