This Article is From Aug 08, 2020

“சுற்றி எங்கும் அழுகைக் குரல்” விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் சொல்லும் சோக சம்பவ தருணங்கள்!

விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் விபத்து அதிர்ச்சியினால் ஆளானதாக என்டிஆர்எஃப் (தேசிய பேரிடர் பதிலளிப்பு படை) இயக்குநர் சத்ய பிரதான் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“சுற்றி எங்கும் அழுகைக் குரல்” விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் சொல்லும் சோக சம்பவ தருணங்கள்!

வானிலை தான் காரணம் என விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் கூறுகிறார்.

ஹைலைட்ஸ்

  • நேற்றிரவு 7.41 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டது
  • இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்
  • இந்த விபத்திற்கு அநேகமாக வானிலைதான் காரணமாக இருக்க முடியும்

போயிங் 737 NG வகையைச் சேர்ந்த ஏர் இந்தியாக்கு சொந்தமான பயணிகள் விமானம் நேற்றிரவு 7.41 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்பொழுது விபத்தில் சிக்கியது. இதில் விமானம் இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 127 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்திலிருந்து மீண்ட ஒருவர் விபத்து குறித்து பகிர்ந்துள்ளார்.

“இது மிகப்பெரிய சோகமான நிகழ்வு. விபத்திலிருந்து தப்பிக்க அனைவரும் எங்கள் இருக்கைக்கு முன் உள்ள இருக்கையை பற்றிக்கொண்டோம். விமானம் விபத்துக்குள்ளானபோது, ​​அது இரண்டு துண்டுகளாகப் பிரிந்தது. மீட்பு பணியின்போது அழுகைக்குரல் ஒலிக்கின்றது. யாரோ ஒருவர் விமானிகள் இறந்துவிட்டார்கள், இரண்டு பெண்கள் இறந்துவிட்டார்கள் என்று சொல்வதை கேட்க முடிந்தது. செய்தித்தாள்களில், 17-18 பேர் இறந்துவிட்டதாக நாங்கள் படித்தோம். இந்த விபத்திற்கு அநேகமாக வானிலைதான் காரணமாக இருக்க முடியும்.” என்று கூறியுள்ளார். தற்போது இவர் கோழிக்கோட்டில் உள்ள ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும்,

“நிலைமை சீராக இல்லாத பட்சத்தில் அவர்கள் வேறு ஒரு விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முயன்றிருக்கலாம். ஆனால், ஒரு கனவு போல இந்த  விபத்து நடந்துவிட்டது. ஒருவேளை இது கடவுளின் விருப்பமாக இருக்கலாம்.” என உயிர் பிழைத்தவர் கூறியுள்ளார்.

விபத்து நடத்த விமானத்திலிருந்து இன்று காலை அதன் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. விபத்தில் காயமடைந்த 127 பேர் - கோழிக்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள 13 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா இடர் காரணமாக வெளி நாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு கொண்டுவர இந்த விமானம் பயணித்திருந்தது. இந்த விபத்தில் காயமடைந்த 127 பேரில் 5 பேர் மிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். “அவர்களில் பெரும்பாலோருக்கு மூளை காயம் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. ஒரு நோயாளிக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு நோயாளிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு மூட்டு அதிர்ச்சி உள்ளது.” என்று டாக்டர் முஹம்மது ஷாஃபி தெரிவித்துள்ளார்.

விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் விபத்து அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டிருப்பதாக என்டிஆர்எஃப் (தேசிய பேரிடர் பதிலளிப்பு படை) இயக்குநர் சத்ய பிரதான் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“உள்ளூர் நிர்வாகத்தை நான் பாராட்ட வேண்டும், விமான நிலையத்தில் உள்ள தன்னார்வலர்கள் மீட்பு நடவடிக்கைகளின் போது போற்றத்தக்க பணிகளை மேற்கொண்டார்கள். நல்ல வேளையாக விமானம் தீப்பிடிக்கவில்லை. தீப்பிடித்திருந்தால் நிலைமை மோசமானதாக மாறியிருக்கும்.” என சத்ய பிரதான் தெரிவித்திருந்தார்.

Helplines: Air India Express - 1800 2222 71, Airport Control Room - 0483 2719493, Malappuram Collectorate - 0483 2736320, Kozhikode Collectorate - 0495 2376901
 

.