கடந்த வாரம் மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 2.50 பைசா குறைத்து நடவடிக்கை எடுத்தது
New Delhi: பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விலை குறைப்பு குறைத்து அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் வைத்தார். பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், ‘தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதற்கெல்லாம் நிதி தேவை அதிகமாக உள்ளது.
மேலும், தமிழக அரசின் பணியாளர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கும் நிலுவையில் இருக்கும் அரியர் தொகையை கொடுக்கும் கட்டாயத்தில் அரசு உள்ளது. இதற்கெல்லாம் போதுமான நிதி ஒதுக்கப்பட்ட பின்னர், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
கடந்த வாரம் மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 2.50 பைசா குறைத்து நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, மாநில அரசுகளையும் கலால் வரியைக் குறைக்குமாறு மத்திய அரசு கோரியுள்ளது. பல மாநிலங்களில் வரி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.