This Article is From Aug 07, 2018

முதல்வர் எடப்பாடி பழனிசாமி - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சந்திப்பு..!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை இன்று சந்தித்து வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சந்திப்பு..!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை இன்று சந்தித்து வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசியுள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சென்னை வந்திருந்தார். அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது பழனிசாமி, அமைச்சரிடம் குறிப்பாணை ஒன்றையும் சமர்பித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரின் சந்திப்பு குறித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ‘தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு மத்தியில் ஆளும் பாஜக முனைப்போடு உள்ளது. தமிழகத்திற்கு பெரிய வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர், முதல்வர் சந்திப்பின் போதும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசப்பட்டது’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது சென்னை - சேலம் 8 வழி பசுமை வழிச்சாலை குறித்துப் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு பலத்த எதிர்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

.