முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த நிர்வாகியுமான சுஷ்மா சுவராஜ் 67 வயதில் காலமானார்!

Sushma Swaraj Died: 9 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ள சுஷ்மா, 1977 ஆம் ஆண்டே அமைச்சராக பொறுப்பேற்றார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த நிர்வாகியுமான சுஷ்மா சுவராஜ் 67 வயதில் காலமானார்!

கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார் சுஷ்மா. அதன் காரணமாகவே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை


New Delhi: 

Sushma Swaraj Death: பாஜக-வின் மூத்த நிர்வாகியும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் இன்று காலமானார். டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இன்று (6-9-19) இரவு சுமார் 9:50 மணி போல சுஷ்மாவின் உடல்நிலை திடீரென்று மோசமடைந்ததாகவும், அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

சுஷ்மா உடல்நிலை குறித்த தகவல் தெரிந்தவுடன், பாஜக-வின் பல மூத்த நிர்வாகிகள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர். நிதின் கட்கரி, ஹர்ஷ்வர்தன், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
 

பிரதமர் மோடி தனது இரங்கலை ட்விட்டர் மூலம் பதிவு செய்தார்.

"இந்திய அரசியலின் மிகச் சிறந்த கதை முடிவுக்கு வந்துள்ளது. தனது வாழ்க்கையை பொது சேவைக்காகவும் ஏழைகளின் முன்னேற்றத்துக்காகவும் செலவிட்ட தலைவருக்காக இந்தியா வருந்துகிறது. சுஷ்மா சுவராஜ் ஜி, தனித்துவமிக்கவர். பல கோடி பேருக்கு அவர் முன்னுதாரணமாக திகழ்ந்தார்" என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார் சுஷ்மா. அதன் காரணமாகவே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. இன்று மாலை அவர், ஜம்மூ காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். 

“நன்றி பிரதமர். நன்றி. எனது வாழ்நாளில் இந்த நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தேன்” என்று வாழ்த்துச் செய்தியில் சுஷ்மா குறிப்பிட்டிருந்தார். 

கடந்த ஜூன் மாதம் அவர், அரசு இல்லத்திலிருந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து அவர் ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று சொல்லப்பட்டது. அந்த தகவல்களை அவர் மறுத்தார். 

9 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ள சுஷ்மா, 1977 ஆம் ஆண்டே அமைச்சராக பொறுப்பேற்றார். இளம் வயதில் அமைச்சர் பொறுப்பேற்ற பெருமை சுஷ்மாவையே சாரும். டெல்லியின் முதல்வராக இருந்துள்ள சுஷ்மா, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை, சுகாதாரத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................