This Article is From Aug 08, 2019

பிறந்த குழந்தையின் உயிரைக் காக்க உதவிய சுஷ்மா சுவராஜ்!! - நெகிழும் தந்தை!

ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்ட முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உதவி கேட்டு வரும் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் பதில் அளிப்பவராக இருந்தார்.

பிறந்த குழந்தையின் உயிரைக் காக்க உதவிய சுஷ்மா சுவராஜ்!! - நெகிழும் தந்தை!

மாரடைப்பு காரணமாக சுஷ்மாவின் உயிர் கடந்த செவ்வாயன்று பிரிந்தது.

Bhopal:

முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த செவ்வாயன்று காலமான நிலையில், அவர் பொறுப்பில் இருந்தபோது பல்வேறு சேவைகளை செய்துள்ளார். அவற்றை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

மத்திய பிரதேசத்தில், கடந்த 2017 ஜனவரி 23-ம்தேதியன்று பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை தேவையாக இருந்தது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் குழந்தையின் தந்தை தேவேஷ் சர்மா உதவி கேட்டுள்ளார். இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. 

இதையடுத்து பிரச்னையின் விவரத்தை ட்விட்டரில் பதிவு செய்து அதனை பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு டேக் செய்துள்ளார். 

இருப்பினும் சுஷ்மாவிடம் இருந்துதான் பதில் வந்தது. குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய சுஷ்மா, இதற்காக மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு குழந்தையும் அதன் குடும்பத்தினரும் விமானம் மூலம் வருவதற்கு ஏற்பாடு செய்தார். இதன்பின்னர் டெல்லியில் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து குழந்தை ஆரோக்கிய நிலையை அடைந்தது. 

தற்போது அந்த குழந்தைக்கு இரண்டரை வயது ஆகிறது. தந்தை தேவேசுக்கு 2-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த விவரங்களை NDTV-யுடன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட தேவேஷ், அடுத்து பெண் குழந்தை பிறந்தால் அதற்கு சுஷ்மா சுவராஜின் பெயரையே வைப்பதாக தெரிவித்தார். 

67 வயதான சுஷ்மா சுவராஜ், உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாரடைப்பால் அவரது உயிர் கடந்த செவ்வாயன்று பிரிந்தது. இதையடுத்து முழு அரசு மரியாதையுடன் சுஷ்மாவின் இறுதிச் சடங்குகள் நடந்த நிலையில் அவரது அஸ்தியை கணவர் சுவராஜ் கவுசால் மகள் பன்சுரி சுவராஜ் ஆகியோர் கங்கை நதியில் கரைத்தனர். 
 

.