வாக்குச்சீட்டு இயந்திர சோதனையை அதிகபடுத்தக் கோரிய வழக்கு: எதிர்கட்சிகளுக்குப் பின்னடைவு!

இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் தொடுக்கும் இரண்டாவது வழக்கு இது

 Share
EMAIL
PRINT
COMMENTS

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது.


New Delhi: 

ஒவ்வொரு தொகுதிப் பிரவுக்கும், 25 சதவிகித இ.வி.எம் வாக்குச்சீட்டு இயந்திரங்கள் மதிப்பிடப்பட வேண்டும் என்று நாட்டின் 21 எதிர்கட்சிகள் தொடர்ந்திருந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், முன்னர் அமலில் இருந்த 5 சதவிகித மதிப்பீடு முறையே தொடரும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் தொடுக்கும் இரண்டாவது வழக்கு இது. இரண்டு முறையும் உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது. தீர்ப்பின் போது, ‘எங்களது முந்தைய உத்தரவை நாங்கள் மாற்றிக் கொள்ளப் போவதில்லை' என்று நீதிமன்றம் கூறியது. 

வாக்குப்பதிவு முடிந்த பின்னர், ஒவ்வொரு தொகுதிப் பிரிவிலும் இருக்கும் விவிபிஏடி என சொல்லப்படும் வாக்குச்சீட்டு இயந்திரத்தின் பதிவுகள், வாக்கு இயந்திரத்தில் பதிவாகியுள்ள ஓட்டுகளுடன் ஒத்துப் போகிறதா என்று வேட்பாளர்கள் முன்னிலையில் சோதிக்கப்படும். மொத்த வாக்குச்சீட்டு இயந்திரங்களில், 5 சதவிகிதம் மட்டுமே இப்படி சோதிக்கப்படும். இதைத்தான் 25 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரின.

ஆனால், வழக்கு விசாரணையின்போது தேர்தல் ஆணையம் தரப்பு, ‘வாக்குச்சீட்டு இயந்திர சோதனை முறையில் மாற்றம் கொண்டு வந்தால், தேர்தல் முடிவுகள் 5 நாட்கள் வரை தள்ளிப்போகும்' என்று வாதிட்டது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................