This Article is From Aug 27, 2020

கொரோனா நெருக்கடி; நாடு முழுவதும் மொகரம் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு!

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அனுமதி கோரியிருந்தால் அதற்கான வாய்ப்புகளையும், ஆபத்துகளையும் மதிப்பீடு செய்திருக்க முடியும். எனவே நாட்டு மக்கள் அனைவரின் சுகாதாரத்தையும் பணயம் வைக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.  

கொரோனா நெருக்கடி; நாடு முழுவதும் மொகரம் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு!

ஹைலைட்ஸ்

  • மொகரம் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது
  • கொரோன பரவலுக்கு காரணம் என்கிற கருத்தியலும் குழப்பமும் உருவாக்கப்படும்
  • நாட்டு மக்கள் அனைவரின் சுகாதாரத்தையும் பணயம் வைக்க முடியாது; நீதிமன்றம்
New Delhi:

நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை மொகரம் பண்டிகை கொண்டபட இருக்கும் நிலையில், கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தினால் மொகரம் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

தற்போது அனுமதியளிக்கப்படுமாயின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கொரோன தொற்று பரவலுக்கு காரணம் என்கிற கருத்தியலும் குழப்பமும் உருவாக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே குறிப்பிட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தினை சேர்ந்த சையத் கல்பே ஜவாத், பூரி ஜகநாத் ஆலயத் தேரோட்டத்திற்கு அனுமதியளித்ததைச் சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் மொகரம் ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் விசாரணைக்கு வந்த இந்த மனுவானது, “நீங்கள் ஒப்பிட்டிருக்கும் தேரோட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட கோயிலில் ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில், இடத்தில் நடைபெறும் நிகழ்வு. அவ்வாறான நிலையில், ஆபத்தை மதிப்பிட்டு அனுமதியளிக்கலாம். ஆனால், நீங்கள் கோரியிருப்பது நாடு முழுவதுக்குமான அனுமதியை.” என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அனுமதி கோரியிருந்தால் அதற்கான வாய்ப்புகளையும், ஆபத்துகளையும் மதிப்பீடு செய்திருக்க முடியும். எனவே நாட்டு மக்கள் அனைவரின் சுகாதாரத்தையும் பணயம் வைக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.  

.