This Article is From Aug 27, 2020

1962 க்கு பிறகு மிகவும் தீவிரமான சூழ்நிலை இது; லடாக்கு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர்!

இரு அண்டை நாடுகளுக்கிடையிலான உறவுக்கு எல்லைப் பகுதிகளில் அமைதி என்பது இன்றியமையாததது என்பதை இந்தியா சீனாவுக்கு தெளிவாக தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

1962 க்கு பிறகு மிகவும் தீவிரமான சூழ்நிலை இது; லடாக்கு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர்!

லடாக்: "இது நிச்சயமாக 1962 க்குப் பிறகு மிகவும் கடுமையான நிலைமை" என்று டாக்டர் எஸ் ஜெய்சங்கர் கூறினார்

New Delhi:

சமீபத்தில் கிழக்கு லடாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 1962க்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான எல்லை பிரச்னை இது என இந்தியாவின்  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஜெய்சங்கர் இதனை கூறியுள்ளார். மேலும்,“சமீபத்தில் நடந்த உயிரிழப்புகள் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாதவையாகும். இதன் காரணமாக இரு நாட்டு எல்லையில் உள்ள படைகளின் எண்ணிக்கையும் முன்னெப்போதும் இல்லா அளவில் உள்ளது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, “இருநாட்டு ராணுவ மற்றும், ராஜதந்திர பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு ஆக்கிரமிப்புகள் சில இடங்களில் மட்டுமே திரும்பப்பெறப்பட்டுள்ளன.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு அண்டை நாடுகளுக்கிடையிலான உறவுக்கு எல்லைப் பகுதிகளில் அமைதி என்பது இன்றியமையாததது என்பதை இந்தியா சீனாவுக்கு தெளிவாக தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், மேற்குத் துறையின் லடாக்கின் பனி பாலைவனங்களிலிருந்து கிழக்கில் அடர்ந்த காடு மற்றும் மலைகள் வரை செல்லும் 3,488 கி.மீ நீளமுள்ள எல்லையில் இந்தியாவும் சீனாவும் உடன்பட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.