This Article is From Jul 31, 2019

திமிங்கலத்தின் வாயில் சிக்கிய கடல் சிங்கம் : அட்டகாசமான அரிய புகைப்படம்

“நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். ஏனென்றால் நான் மீண்டும் ஒருபோதும் பார்க்காத ஒரு தருணத்தை கைபற்றினேன்” என்று அவர் கூறினார்

திமிங்கலத்தின் வாயில் சிக்கிய கடல் சிங்கம் : அட்டகாசமான அரிய புகைப்படம்

விரைவாக செயல்பட்டு நம்ப முடியாத அரிய தருணத்தை தன் கேமராவில் பதியத் தொடங்கினார்.

Los Angeles:

வனவிலங்கு புகைப்படக் கலைஞர் திமிங்கலத்தின் வாயில் விழுந்த கடல் சிங்கத்தை புகைப்படமாக எடுத்துள்ளார். இந்த மாதிரி ஒரு தருணத்தை “வாழ்நாளில் ஒரு முறை”  மட்டுமே வாய்க்கும் என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம் கலிபோர்னியாவில் உள்ள மாண்டேரி விரிகுடா கடற்கரையில் திமிங்கலத்தை பார்க்கும் படகு பயணத்தின் போது கடல் உயிரியலாளரான  சேஸ் டேக் டேக்கர் இந்த அற்புதமான காட்சியை எடுத்தார்.

ஏறக்குறைய 10 ஆண்டுகள் வனவிலங்குகளின் புகைப்படங்களை எடுத்து வரும் 27 வயதான அவர், “நான் நிறைய க்ரேஷியான விஷயங்களைப் பார்க்கிறேன். ஆனால் இதுபோல் ஒருபோதும் இல்லை” என்று கூறினார். 

ஜூலை 22ம் தேதிதான் திமிங்கலத்தைப் பார்க்கும் படகு பயணத்தில் இருந்ததாகக் கூறினார். வேட்டையாடுவதற்கான நேரத்தில் இருக்கும் திமிங்கலங்களை பார்த்துள்ளார். 

சரியான நேரத்தில் கடல் சிங்கம் ஒன்று துரதிஷ்டவசமாக திமிங்கலத்தின் வாயுக்குள் சிக்கியது. என்று டேக்கர் தன் நேர்காணலிலும் இண்ஸ்டாகிராம் பதிவிலும் விவரித்தார்.

விரைவாக செயல்பட்டு நம்ப முடியாத அரிய தருணத்தை தன் கேமராவில் பதியத் தொடங்கினார். 

“நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். ஏனென்றால் நான் மீண்டும் ஒருபோதும் பார்க்காத ஒரு தருணத்தை கைபற்றினேன்” என்று அவர் கூறினார்.

கடல் சிங்கம் திமிங்கலம் வாயை மூடுவதற்குள் தப்பித்து சென்றிருக்கலாம் ஆனால் அது நன்றாக சிக்கிக் கொண்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Click for more trending news


.