This Article is From Dec 18, 2019

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து முதன்முறையாக ஸ்ரீநகரில் ஜாமியா மஸ்ஜித் திறப்பு!!

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், முன்னெச்சரிக்கையாக அங்கு மூடப்பட்டிருந்த ஸ்ரீநகர் ஜாமியா மசூதி முதன்முறையாக இன்றைக்கு திறக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து முதன்முறையாக ஸ்ரீநகரில் ஜாமியா மஸ்ஜித் திறப்பு!!

இன்று மதியம் நடைபெற்ற பிரார்த்தனையில் 70பேர் கலந்து கொண்டனர்.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து முதன்முறையாக ஸ்ரீநகர் ஜாமியா மஸ்ஜித் திறக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், முன்னெச்சரிக்கையாக அங்கு மூடப்பட்டிருந்த ஸ்ரீநகர் ஜாமியா மசூதி முதன்முறையாக இன்றைக்கு திறக்கப்பட்டுள்ளது. 

இன்று மதியம் நடைபெற்ற பிரார்த்தனையின்போது, மத குரு முப்தி குலாம் ரசூல் தலைமையில் தொழுகை நடத்தப்பட்டது. இதில் 70 பேர் கலந்து கொண்டனர். மொத்தம் இந்த மசூதியில் சுமார் 30 ஆயிரம்பேர் தொழுகை நடத்த முடியும். 

13-ம் நூற்றாண்டைசேர்ந்த இந்த மசூதி இந்தியாவின் மிக நீளமான மசூதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

மசூதி திறக்கப்பட்டது குறித்து காஷ்மீரை சேர்ந்த 55 வயதான முகம்மது இக்பால் என்பவர் கூறுகையில், 'நான் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது, தொழுகைக்கான அழைப்பு பள்ளிவாசலில் இருந்து ஒலித்தது. என்னால் இதை நம்ப முடியவில்லை. பின்னர் ஓடோடி வந்து பள்ளிவாசலில் தொழுதேன். கடந்த நான்கரை மாதங்களாக பள்ளிவாசல் மூடப்பட்டிருந்தது. 

இது திறக்கப்பட்டதை நான் மடிந்து மீண்டும் உயிர்த்தெழுந்ததை போன்று உணர்ந்தேன். எனது சந்தோசத்தை விவரிக்க வார்த்தை இல்லை. இருப்பினும் காஷ்மீரில் பிரச்னை நீடிப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது.' என்றார். 

.