தமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து!

தமிழக அரசு ஊரடங்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்ததைத் தொடர்ந்து தற்போது சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொற்றானது தொடர்ந்து உயர்ந்து வரக்கூடிய நிலையில், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் அன்லாக் 3 நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றது.

இந்நிலையில் ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே சில முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. முன்னதாக 7 சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்தன. தமிழகத்திலும் தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு சிறப்பு ரயில் சேவையை ரத்து செய்ய கோரியது. இதன் காரணமாக  ஜூலை 31 வரை சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

தமிழக அரசு ஊரடங்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்ததைத் தொடர்ந்து தற்போது சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக  திருச்சி - செங்கல்பட்டு, மதுரை - விழுப்புரம், அரக்கோணம் - கோவை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கோவை - மயிலாடுதுறை, திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.