This Article is From Oct 02, 2019

ஹிட்டானது சைரா நரசிம்மாரெட்டி :சிரஞ்சீவியை கட்டியணைத்து நன்றி சொன்ன மகன் ராம்சரண்!! #Photos

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சைரா நரசிம்மாரெட்டி திரைப்படம் இன்று வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஹிட்டானது சைரா நரசிம்மாரெட்டி :சிரஞ்சீவியை கட்டியணைத்து நன்றி சொன்ன மகன் ராம்சரண்!! #Photos

தந்தை முத்தமிடும் போட்டோவை ராம்சரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

New Delhi:

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து 5 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் ஹிட்டானதை தொடர்ந்து தயாரிப்பாளரான ராம்சரண் தந்தை சிரஞ்சீவியை கட்டியணைத்து நன்றி கூறினார். அவரை முத்தமிட்டு சிரஞ்சீவி வாழ்த்தும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

விடுதலை போராட்டத்தை பின்புலமாகக் கொண்டு சைரா நரசிம்மாரெட்டி திரைப்படம் இன்று வெளியானது. ஹீரோவாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, தமன்னா, நயன்தாரா, அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் இன்று திரைக்கு வந்தது. அதனை சிரஞ்சீவி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், மற்ற ரசிகர்கள் மத்தியிலும் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. 
 

:

படத்தை சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம்சரண் தயாரித்துள்ளார். தற்போது சைரா ஹிட்டானதை தொடர்ந்து தந்தையை கட்டியணைத்து நன்றி கூறியுள்ளார் ராம்சரண். அவருக்கு சிரஞ்சீவி முத்தமிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார். 

இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ராம் சரண். தந்தையே நீங்கள் எங்களுக்கு எல்லாமும் தந்தீர்கள். சைராவும் மெகா ஹிட் ஆகியுள்ளது. இதற்கும் உங்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று ராம் சரண் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 
 

.