கொரோனா பாதிப்படைந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தற்போது நிலைமையை எப்படி கையாள்கிறேன் என்பது குறித்து மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் வீடியோ கான்பரசிங் மூலம் உரையாற்றிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறும்போது, மருத்துவமனையில் எனது துணிகளை நானே துவைத்துக்கொள்கிறேன். ஏனெனில், கொரோனா நோயாளிகள் தங்களது துணிகளை துவைக்க கொடுக்கக் கூடாது.
இவ்வாறு துணிகளை துவைப்பதன் மூலம் சில பலன்களையும் நான் பெற்றுள்ளேன். எனது கையில் அறுவை சிகிச்சை செய்திருந்தேன். பல பிசியோதெரபி பயிற்சி முடித்த பின்பும், கைகளை அமுக்க முடியாமல் இருந்து வந்தது. தற்போது, துணிகளை துவைத்த பின்னர் என்னால் கைகளை அமுக்க முடிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். அதனால், நம்மால் முடிந்த சிறிய விஷயங்களை நாமே செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
இந்த வீடியோவில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நீள நிறத்தில் மருத்து அங்கி மற்றும் முகக்கவசம் அணிந்தபடி காணப்படுகிறார். மாநிலத்தில் கொரோனா நிலரவம் குறித்து மிதிப்பாய்வு செய்ய இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று, சிவராஜ் சவுகான் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, தலைநகர் போபாலில் உள்ள மருத்துவமனையில் அன்றைய தினமே அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, கொரோனா பாதிக்கப்பட்ட முதல், யாரும் பயப்பட வேண்டாம், கொரோனாவை எப்படி எதிர்கொள்ளவது என சிவராஜ் சிங் அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.