அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பிய நோட்டீஸ்க்கு இடைக்காலத் தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில், சட்டபேரவைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.  சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருப்பதால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக்கூறி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மூவரும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை  முறையிட்டனர்.

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பிய நோட்டீஸ்க்கு இடைக்காலத் தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸ்க்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால், அதிமுக எம்.எல்.ஏக்கள், பிரபு, ரத்தினசபாபதி கலைச்செல்வன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக கொறடா, சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்தார். இதைத் தொடர்ந்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக் கோரி, எம்.எல்.ஏக்கள் மூவருக்கும் சபாநாயகர் தனபால்  நோட்டீஸ் அனுப்பினார்.

இதன் தொடர்ச்சியாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில், சட்டபேரவைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.  சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருப்பதால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக்கூறி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மூவரும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை  முறையிட்டனர்.

இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டா. அதன்படி திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார்.

அதன்படி இன்று விசாரணை செய்த நீதிபதிகள், அதிமுக அதிர்ப்தி எம்.எல்.ஏக்கள் மூவருக்கு எதிரான சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸ்க்கு  இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வெறும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே நடந்த விசாரணையில் நோட்டீஸ்க்கு தடை விதித்து ரஞ்சன் கோகாய் அமர்வு உத்தரவிட்டது.