This Article is From May 16, 2020

'விமான போக்குவரத்து துறை நலனுக்காக வான்வெளி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்' - மத்திய அரசு

தற்போது 50 சதவீத வான்வெளி மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் எரிபொருள், நேரம் மிச்சப்படுத்தப்படும் என்பதால் விமானப் போக்குவரத்து துறைக்கு இந்த நடவடிக்கை மிகவும் உதவிகரமாக இருக்கும். 

'விமான போக்குவரத்து துறை நலனுக்காக வான்வெளி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்' - மத்திய அரசு

தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு செய்வதற்காக 6 விமான நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

New Delhi:

விமானப் போக்குவரத்து துறையின் நலனுக்காக வான்வெளியை பயன்படுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி அறிவித்த ரூ. 20 கோடி மதிப்பிலான தற்சார்பு இந்தியா திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது-

விமான போக்குவரத்தில் தனியார் முதலீடுகளால் முதல்கட்டமாக இந்திய விமான கழகத்திற்கு ரூ. 2,300 கோடி கிடைக்கும். விமான நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான பணிகள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

விமானங்களை இயக்குவதற்கான செலவில் ரூ. 1,000 கோடி வரை மிச்சப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வான் பரப்பில் இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, வான் எல்லையை சுதந்திரமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும். 
 
தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு செய்வதற்காக 6 விமான நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

தற்போது 50 சதவீத வான்வெளி மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் எரிபொருள், நேரம் மிச்சப்படுத்தப்படும் என்பதால் விமானப் போக்குவரத்து துறைக்கு இந்த நடவடிக்கை மிகவும் உதவிகரமாக இருக்கும். 

உலகத் தரம் வாய்ந்த விமான நிலையங்களை அமைப்பதற்காக 6 விமான நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தனியார் உதவியுடன் இந்த விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும். 

தற்போது விமானங்கள் பழுதடைந்தால் அதனை சரி செய்வதற்கு வெளிநாடுகளின் உதவியைத்தான் நம்பியுள்ளோம். இதனை உள்நாட்டிலேயே சரி செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்ததார். முன்னதாக கடந்த 3 நாட்களில் விவசாயிகள், சிறு குறு தொழில்கள், மீனவர்கள், வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் நலன் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. குறிப்பாக விவசாயிகளின் நலனுக்காக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
.