This Article is From Apr 03, 2020

WFH செய்த பெண் நிருபர்… சட்டையில்லாமல் வெளியே வந்த அப்பா… அப்புறம் நடந்தது..?

இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து இதுவரை, 7 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

WFH செய்த பெண் நிருபர்… சட்டையில்லாமல் வெளியே வந்த அப்பா… அப்புறம் நடந்தது..?

பலரும் வேடிக்கையாக வீடியோவுக்குக் கீழ் கருத்திட்டு வருகிறார்கள்.  

உலகின் எந்தப் பகுதியையும் விட்டுவைக்காமல் ஆட்டிப் படைத்து வருகிறது கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஒரே வழி, ஒருவரிடத்திலிருந்து இன்னொருவர் தள்ளியிருப்பதுதான் என்று மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். இந்த காரணத்தினால் உலகின் பல்வேறு நிறுவனங்களும், தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்யுமாறு வலியுறுத்துகிறது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக பல லட்சம் மக்கள் வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்து வருகிறார்கள்.

இப்படி வேலை பார்ப்பது மிகச் சுலபமாக இருக்கும் என்று பலர் நினைத்திருக்கலாம். ஆனால், அதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் பல. அப்படி சிக்கல்களான பல சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு அவை டிரெண்டும் ஆகிவிடுகின்றன..

அப்படியொரு சம்பவம்தான் அமெரிக்காவிலும் நடந்துள்ளது. ஃப்ளோரிடாவைச் சேர்ந்த சன்கோஸ்ட் நியூஸ் நெட்வோர்க் நிறுவனத்தில் நிருபராக பணியாற்றி வருபவர் ஜெசிக்கா லேங். வீட்டிலிருந்தபடி பணி செய்து வரும் லேங், தனது அடுப்பங்கரையில் ஒரு வீடியோ ஷூட் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லேங்கின் தந்தை சட்டையில்லாமல் ஃபிரேமுக்குள் வருகிறார். 

இதைப் பார்க்கும் ஜெசிக்கா, “அப்பா! ஹோலி கிராப்,” என்று டென்ஷன் ஆகிறார். 

அதே நேரத்தில் இந்த பிழையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “வீட்டிலிருந்து வேலை பார். எல்லாம் சரியாகவே நடக்கும் என்றார்கள்,” என நகைச்சுவைத் ததும்ப பதிவிட்டுள்ளார் ஜெசிக்கா. 

 

இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து இதுவரை, 7 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. 12,000 லைக்ஸ்களை குவித்துள்ளது. பலரும் வேடிக்கையாக வீடியோவுக்குக் கீழ் கருத்திட்டு வருகிறார்கள்.  

Click for more trending news


.