This Article is From Dec 09, 2018

அதிமுகவுடன் - அமமுக இணைய தயார்: தங்கதமிழ்ச்செல்வன்

முதல்வரையும், சில அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் மாற்றி ஜெயலலிதா ஆட்சியை அமைத்தால் அதிமுகவுடன் அமமுக இணைய தயார்.

அதிமுகவுடன் - அமமுக இணைய தயார்: தங்கதமிழ்ச்செல்வன்

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் நாங்கள் அதிமுகவில் இணைந்துகொள்ள தயார் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

திமுக. தான் எங்களுக்கு முதல் எதிரி. அதிமுகவையும், இரட்டை இலையையும் அழிக்க நாங்கள் வரவில்லை. எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அதிமுகவும் இருக்க வேண்டும், இரட்டை இலையும் இருக்க வேண்டும். முதல்வரையும், சில அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் மாற்றி ஜெயலலிதா ஆட்சியை அமைத்தால் அதிமுகவுடன் அமமுக இணைய தயார்.

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் நாங்கள் அதிமுகவில் இணைந்து கொள்கிறோம். அதேபோல், நாங்கள் வெற்றிபெற்றால் நீங்கள் எங்களுடன் வந்துவிடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுக, திமுக, பா.ஜ.க மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய தலைமயை மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டது உண்மைதான். அதை சசிகலா, டி.டி.வி. தினகரனால் தான் கொடுக்க முடியும். முன்கூட்டியே இதை உணர்ந்து செயல்பட்டால் நல்லது.

மதசார்பற்ற அணிகளுடன் தான் கூட்டணி என்று டிடிவி தினகரன் தெளிவுப்படுத்தி விட்டார். எனவே பா.ஜ.கவுடன் கூட்டணி சேர மாட்டோம் என்று அவர் கூறினார்.
 

.