வீட்டிற்குள் பிடிப்பட்ட அரிய வகை இரட்டை தலை பாம்பு; மிரட்டல் வீடியோ!

ஒரு வீட்டிலிருந்து முழுமையாக உருவான இரண்டு தலைகளைக் கொண்ட ஒரு அரிய ஓநாய் பாம்பு மீட்கப்பட்டது" என்று வனத்துறை அதிகாரி நந்தா தெரிவித்துள்ளார்.

வீட்டிற்குள் பிடிப்பட்ட அரிய வகை இரட்டை தலை பாம்பு; மிரட்டல் வீடியோ!

அரிய வகை ஓநாய் பாம்பு ஒன்று சமீபத்தில் ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • முழுமையான இரட்டை தலைகளைக் கொண்ட அரிய வகை ஓநாய் பாம்பு
  • வனப்பகுதி வரம்பில் உள்ள வீட்டிலிருந்து பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
  • பாம்பின் வீடியோ இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முழுமையான இரட்டை தலைகளைக் கொண்ட அரிய வகை ஓநாய் பாம்பு ஒன்று சமீபத்தில் ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டரில் பகிர்ந்த அந்த வீடியோவில், இரண்டு தலைகளை கொண்ட அந்த பாம்பு தரையில் சறுக்கி செல்கிறது. 

இதுதொடர்பாக தி மிரர் தெரிவித்துள்ள தகவலின் படி, விஷமில்லாத ஓநாய் பாம்பிற்கு முழுமையாக இரண்டு தலைகள் உள்ளன. அதாவது, நான்கு கண்கள் மற்றும் இரண்டு நாக்குகள் உள்ளன. ஆனால், ஒரே உடல் மட்டுமே கொண்டுள்ளது. நம்ப முடியாத அளவு இரண்டு தலைகளும் ஒன்றுக்கொன்று சுயமாக செயல்படுகின்றன. அவைகள் தனக்கான உணவுக்காக தனித்தனியாக போராடுவதைக் காணப்பட்டுள்ளது. 

"ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தின் தெஹ்ன்கிகோட் வனப்பகுதி வரம்பில் உள்ள ஒரு வீட்டிலிருந்து முழுமையாக உருவான இரண்டு தலைகளைக் கொண்ட ஒரு அரிய ஓநாய் பாம்பு மீட்கப்பட்டது" என்று வனத்துறை அதிகாரி நந்தா, பாம்பின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து, அந்த பாம்பு காட்டுக்குள் விடப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இரட்டை தலை பாம்பின் வீடியோ இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 15,000க்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பலரும் அதற்கு ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். 

தி மிரர் தகவலின் படி, புகைப்படக்காரர் ராகேஷ் மொகாலிக் கூறும்போது, இரட்டை தலைகளில் ஒரு தலை சற்று பெரிதாக உள்ளது. எனினும் இரண்டும் தங்களுக்கான உணவுக்காக போராடுகிறது. மொகாலிக்கே இந்த அரியவகை பாம்பை கண்டுபிடித்தவர், இரண்டு தலைகளும் சுயமாக செயல்படுவதால் இந்த பாம்பு காடுகளில் உயிர்வாழ்வது கடினமானது என்று அவர் கூறியுள்ளார். 

இரண்டு தலை பாம்புகளின் நிகழ்வுகள் அசாதாரணமானவை என்றாலும், கேள்விப்படாதவை. கடந்த ஆண்டு, முழுமையாக உருவான இரண்டு தலைகளைக் கொண்ட மற்றொரு பாம்பு அமெரிக்காவில் பிடிப்பட்டது. இதனை கண்டுபிடித்தவர்கள் அதற்கு டபுள் டேவ் என்று பெயரிட்டனர்.

Click for more trending news