This Article is From Feb 17, 2019

‘’நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என ரஜினி அறிவிப்பு’’ – ரசிகர்கள் அதிர்ச்சி

சட்டமன்ற தேர்தல்தான் தங்களது இலக்கு என்று ரஜினி கூறியுள்ளார். முறைப்படி பார்த்தால் அதற்கு குறைந்தது இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன.

‘’நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என ரஜினி அறிவிப்பு’’ – ரசிகர்கள் அதிர்ச்சி

ரஜினியின் அறிவிப்பு அவரது தொண்டர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துள்ளார் ரஜினி
  • சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என்று ரஜினி கூறியுள்ளார்
  • தனது படங்களை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்த கூடாது: ரஜினி

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மிகப்பெரும் அறிவிப்பை நடிகரும் புதிய அரசியல்வாதியுமான ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இது அவரது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ரஜினியின் கையெழுத்து இடப்பட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல்தான் எங்களது இலக்கு

 

 

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ எந்தக் கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு ரஜினிகாந்த் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல்தான் தங்களது இலக்கு என்று ரஜினி கூறியுள்ளார். முறைப்படி பார்த்தால் அதற்கு குறைந்தது இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. நாடாமன்ற தேர்தலில் ஆட்டத்தை காட்டுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.

 

.