This Article is From Sep 07, 2019

விஞ்ஞானிகள் உழைப்பு வீண்போகாது: ராகுல் காந்தி 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திராயன் -2 திட்டம் நிறைவேற பாடுபட்ட இஸ்ரோவிற்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்துகள் உங்களின் அர்ப்பணிப்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது. உங்களின் உழைப்பு என்றுமே வீண் போகாது எனத் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானிகள் உழைப்பு வீண்போகாது: ராகுல் காந்தி 

லேண்டரிலிருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் அறிவித்தார். (File)

New Delhi:

விஞ்ஞானிகளின் ஆர்வமும் அர்ப்பணிப்பும் மக்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவை வாழ்த்தினார்.

சந்திராயான் -2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சனிக்கிழமை அதிகாலை 2:15 மணியளவில் தரையிரங்கும் என எதிர்எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லேண்டரிலிருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் அறிவித்தார். 

இந்நிலையில் காங்கிரஸ்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திராயன் -2 திட்டம் நிறைவேற பாடுபட்ட இஸ்ரோவிற்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்துகள் உங்களின் அர்ப்பணிப்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது. உங்களின் உழைப்பு என்றுமே வீண் போகாது எனத் தெரிவித்துள்ளார். 

.