நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

உங்களை காப்பதற்காக மட்டும் நீதிமன்றத்தில் மன்னிப்பு கூறியுள்ளீர்கள். ஆனால், உங்களால் நாட்டு மக்கள் முன்பு மன்னிப்பு கேட்க முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியை, ’காவலாளியே திருடன்’ என ராகுல் கூறியிருந்தார்.

New Delhi:

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதற்காக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார். 

ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டாளும், நீங்கள் இன்று மன்னிப்பு கேட்க வேண்டும். உங்களை காப்பதற்காக மட்டும் நீதிமன்றத்தில் மன்னிப்பு கூறியுள்ளீர்கள். ஆனால், உங்களால் நாட்டு மக்கள் முன்பு மன்னிப்பு கேட்க முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னதாக, ராகுல் காந்தி மிக கவனமாக பேச வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம் அவர் மீதான அவதூறு வழக்கையும் முடித்து வைத்தது. 

நீதிமன்ற தீர்ப்பு குறித்து எதிர்காலத்தில் பேசும் போது, ராகுல் காந்தி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமே, பிரதமர் மோடியை, 'காவலாளியே திருடன்' என கூறியதாக ராகுல் காந்தி கூறியிருந்தது கடும் சர்ச்சையான நிலையில், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதால், நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைக்க முன்வந்தது. அதில், நீதிமன்ற தீர்ப்பு குறித்து எதிர்காலத்தில் பேசும் போது, ராகுல் காந்தி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதால், இந்த வழக்கை முடித்து வைத்து தீர்ப்பளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, பாஜக செயல்தலைவர் ஜெ.பி.நட்டா தனது ட்வீட்டர் பதிவில், ரஃபேல் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனிடையே, ராகுல் காந்தி உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக படிக்காமல் கருத்து கூறக்கூடாது. இனி எதிர்காலங்களில் கவனமாக பேசவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, நான் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியது பிரதமர் மோடியிடம் மின்னிப்பு கேட்டதாக ஆகாது என்று ராகுல் என்டிடிவியிடம் கூறியிருந்தார். 

மேலும், நான் 'காவலாளியே திருடன்' என கூறியதற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரவில்லை, நீதிமன்றம் அதனை கூறியதாக சொன்னதற்காகவே நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரியுள்ளேன். இதற்காக பிரதமர் மோடியிடம் நிச்சியம் மன்னிப்பு கோர முடியாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். 

Listen to the latest songs, only on JioSaavn.com