This Article is From Jun 02, 2019

மீண்டும் அக்‌ஷய் குமாருடன் இயக்குநராக இணைந்த ராகவா லாரன்ஸ்

தமிழில் வெளிவந்த நகைச்சுவையும் த்ரில்லரும் இணைந்த திரைப்படமான காஞ்சனா திரைக்கதை தான் லக்‌ஷ்மி பாமின் திரைக்கதையாக உள்ளது.

மீண்டும் அக்‌ஷய் குமாருடன் இயக்குநராக இணைந்த ராகவா லாரன்ஸ்

ஹைலைட்ஸ்

  • லக்‌ஷிம் பாம் படத்தில் இயக்குநராக மீண்டும் இணையும் ராகவா லாரன்ஸ்
  • அக்‌ஷய் குமாருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
  • காஞ்சனாவின் ஹிந்தி உருவாக்கமே இந்த படம்
New Delhi:

இயக்குநர் ராகவா லாரன்ஸ் மீண்டும் அக்‌ஷய் குமாரை நடிக்கும் படமான லக்‌ஷ்மி பாமினை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன் பணத்தை விட தன்மானம் முக்கியம், ‘மதியாதார் தலைவாசல் மிதியாதே' என்று கூறி மரியாதை இல்லை என்ற காரணத்தினால் படத்திலிருந்து விலகினார்.

தற்போது “அக்‌ஷய் குமார் என்னுடைய உணர்வினை புரிந்து கொண்டார், தயாரிப்பாளர் ஷபினா கானுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மரியாதை அளித்த இருவருக்கும் நன்றி” என்று கூறியிருந்தார்.

தமிழில் வெளிவந்த நகைச்சுவையும் த்ரல்லரும் இணைந்த திரைப்படமான காஞ்சனா திரைக்கதை தான் லக்‌ஷ்மி பாமின் திரைக்கதையாக உள்ளது. காஞ்சனா படத்தில் திருநங்கையாக ஆர். சரத்குமார், ராகவா லாரன்ஸ், லக்‌ஷ்மி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி மற்றும் ஸ்ரீராமன் ஆகியோர் நடித்துள்ளன.
 

.