’சுயமரியாதைதான் முக்கியம்’அக்‌ஷய் குமார் படத்தை இயக்க மாட்டேன் - ராகவா லாரன்ஸ்

லக்‌ஷ்மி பாம் படத்தில் அக்‌ஷய் குமார் திருநங்கை பேயாக நடிப்பார் எனத் தெரிகிறது. கிரா அத்வானி ஹீரோயினாக நடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
’சுயமரியாதைதான் முக்கியம்’அக்‌ஷய் குமார் படத்தை இயக்க மாட்டேன் -  ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் மற்றும் அக்‌ஷய் குமார் (courtesy Twitter)


Chennai: 

ஹைலைட்ஸ்

  1. லக்‌ஷ்மி பாம் படத்திலிருந்து வெளியேறுகிறேன் -ராகவா லாரன்ஸ்
  2. படத்தின் பர்ஸ்ட் லுக் என்னுடைய கவனத்திற்கு வரவில்லை.
  3. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எனக்கு திருப்தியாகவும் இல்லை.

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அக்‌ஷய் குமாரை வைத்து ‘லக்‌ஷ்மி பாம்' என்ற படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. தமிழில் வெளியான ஹாரர் காமெடி படமான காஞ்சனாவின் ஹிந்தி படமாக இது இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சனிக்கிழமை அன்று இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் குறித்து எந்த வகையிலும் ராகவா லாரன்ஸ்க்கு தெரிவிக்கப்படவில்லை. இயக்குநரின் கவனத்திற்கு வராமலே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

இது குறித்து ராகவா லாரன்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் கொடுத்துள்ள விளக்கம் பின்வருமாறு, “தமிழில் மதியதார் தலைவாசல் மிதியாதே என்று பழமொழி உண்டு. உலகத்தில் பணம்,பேறு, புகழ் எல்லாவற்றையும் விட சுய மரியாதை மிகவும் முக்கியம். அதனால் இந்த படத்திலிருந்து வெளியேறுகிறேன். காஞ்சனா படத்தை ஹிந்தியில் எடுப்பதாக இருந்த லக்‌ஷ்மி பாம்ப் படத்திலிருந்து வெளியேறுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

படத்திலிருந்து வெளியேற பல காரணங்கள் கூறியிருந்தார். அதில் முக்கியமாக “ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்னுடைய கவனத்திற்கு வராமலே வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து எந்தவொரு கருத்தும் கேட்கவில்லை. இந்த போஸ்டர் எனக்கு பிடிக்கவும் இல்லை. ஒரு படைப்பாளனாக இது எனக்கு வலிமிகுந்த ஒன்றாக உள்ளது என்றும் கூறியிருந்தார்.

இந்தப் படம் குறித்து எந்தவொரு அக்ரிமெண்டிலும் கையெழுத்து போடவில்லை என்று தெரிவித்து, படத்திலிருந்து வெளியேறுவதாகவும் அறிவித்தார். 

விரைவில் அக்‌ஷய் குமாரை சந்தித்து இது குறித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

லக்‌ஷ்மி பாம் படத்தில் அக்‌ஷய் குமார் திருநங்கை பேயாக நடிப்பார் எனத் தெரிகிறது. கிரா அத்வானி ஹீரோயினாக நடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................