This Article is From Aug 01, 2020

Arms, Abs-க்கான வொர்க்-அவுட்: தினமும் 15 நிமிடங்கள் செய்தாலே ஃபிட் ஆகலாம்..!

செல்போன் கடிகாரத்தில் 15 நிமிடங்கள் டைமர் செட் செய்து கொண்டு, கீழ் குறிப்பிட்ட லேப்ஸ்களை முடிந்த வரையில் செய்யவும்

Arms, Abs-க்கான வொர்க்-அவுட்: தினமும் 15 நிமிடங்கள் செய்தாலே ஃபிட் ஆகலாம்..!

15 நிமிடங்களுக்கான உடற்பயிற்சி

ஹைலைட்ஸ்

  • This arms and abs workout can be done in 15 minutes
  • You can combine it with a cardio session of the same duration
  • It can help in giving you toned abs and arms

நாம் நமது உடலையும், மனதையும் பக்குவப்படுத்துவதற்கு இந்த லாக்டவுன் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. வீட்டில்  தினமும் ஒரு 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே போதும். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம். உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக பயிற்சிக் கொடுத்து வரலாம். அந்த வகையில், 15 நிமிடங்களில் கைகள் மற்றும் வயிற்றுப் பகுதிகளுக்குப் பயிற்சி செய்வது குறித்து இங்குப் பார்க்கலாம்.

நீங்கள் தவறாமல் வொர்க்-அவுட் செய்கிறீர்கள் என்றால், வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் மார்பு, கைகள், வயிற்றுப் பகுதி, முதுகு, கீழ் உடல் மற்றும் மேல் உடல் என அனைத்திலும் வொர்க்-அவுட் செய்கிறீர்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதே போல், கார்டியோ மற்றும் எடை பயிற்சி இரண்டின் கலவையாகவும் இருக்க வேண்டும்.

9vo6l40g

உடலின் அனைத்து பாகங்களும் செயல்படும் விதமாக வொர்க்-அவுட் இருக்க வேண்டும்
Photo Credit: iStock

Also read: Do You Have A Pre-Workout Routine? Celeb Fitness Trainer Tells Why It Is So Important

வொர்க்-அவுட்டுக்கு அதிக நேரம் செலவழிக்க முடியாதவர்கள், தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் வரையில் மட்டுமாவது உடற்பயிற்சி செய்யலாம். நீங்கள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எந்தவித கருவிகளும் இல்லாமல் 15 நிமிடங்களுக்கான வொர்க்-அவுட் செய்வது குறித்து ஃபிட்னஸ் செலிபிரிட்டி கய்லா இட்சைன்ஸ் விளக்குகிறார்.

  • X புஷ்-அப் - 12 முறை (ஒரு பக்கத்திற்கு 6)
  • சைடு பிளாங்க் & ஹிப் லிஃப்ட் - 24 முறை (ஒரு பக்கத்திற்கு 12)
  • தோள்பட்டை டேப் - 24 முறை (ஒரு பக்கத்திற்கு12 )
  • பிளாங்க் டிப் - 24 முறை (ஒரு பக்கத்திற்கு12 )
  • சைடு-டூ-சைடு ஆஃப் பர்பீ - 12 முறை (ஒரு பக்கத்திற்கு 6 )
  • பெண்டு-லெக்-ஜக்நைஃப் - 12 முறை 

செல்போன் கடிகாரத்தில் 15 நிமிடங்கள் டைமர் செட் செய்து கொள்ளவும். மேற்கண்ட லேப்ஸ்களை முடிந்த வரையில் செய்யவும். டைமர் முடிவதற்கு முன்பு மேற்கண்ட லேப்ஸ்களை செய்து முடிப்பதற்கு முயற்சி செய்யவும்.

இந்த வொர்க்-அவுட் செய்வதற்கு பெரிதாக எந்த உபகரணங்களும் தேவையில்லை. ஆனால், தரைவிரிப்பு கட்டாயம் தேவை. உடற்பயிற்சி, வொர்க்-அவுட், தியானம் அனைத்தும் தரைவிரிப்பின்றி செய்யக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

.