This Article is From Sep 03, 2019

இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும் 5 பழங்கள்!!

ஸ்ட்ராபெர்ரியில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது.  இதில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது.  இதனால் சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கும்.  ஸ்ட்ராபெர்ரியை ஸ்மூத்தி, சாலட், ஷேக் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.  

இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும் 5 பழங்கள்!!

ஹைலைட்ஸ்

  • பளபளக்கும் சருமத்திற்கு கீரைகள் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம்.
  • ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளியை சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளக்கும்.
  • சில உணவுகளில் ஆண்டி-ஏஜிங் தன்மை உள்ளது.

ஒழுங்கற்ற உணவுமுறை, மன அழுத்தம், மதுப்பழக்கம், புகைப்பழக்கம், தூக்கம் தடைப்படுதல் போன்றவை மிக விரைவில் சருமத்தை முதிர்ச்சியடைய செய்யும்.  நம்மில் பெரும்பாலானோர் ஆண்டி-ஏஜிங் கிரீம் மற்றும் சரும பராமரிப்பிற்கான கிரீம்களை பயன்படுத்துவார்கள்.  ஆரோக்கியமான, பொலிவான மற்றும் பளபளக்கும் சருமத்திற்கு ஆண்டி-ஏஜிங் தன்மை கொண்ட பழங்களை சாப்பிட்டு வரலாம்.  ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டு வந்தால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.  

அவகாடோ: 

அவகாடோவை சாப்பிட்டு வந்தால் சருமம் ஆரோக்கியமாகவும், மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்.  இதில் ஆண்டி-ஏஜிங் தன்மை இருக்கிறது.  இதில் வைட்டமின் கே, சி, ஈ, ஏ, பி ஆகிய சத்துக்கள் இருக்கிறது.  சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி பளபளப்பை தரும்.  அவகாடோ கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் மாஸ்க் மற்றும் பேக் போட்டு வரலாம்.  

d8iqvl1

2. ஸ்ட்ராபெர்ரி:

ஸ்ட்ராபெர்ரியில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது.  இதில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது.  இதனால் சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கும்.  ஸ்ட்ராபெர்ரியை ஸ்மூத்தி, சாலட், ஷேக் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.  

3. பப்பாளி:

சருமத்திற்கு பல அதிசய நன்மைகளை பயக்கக்கூடியது பப்பாளி.  பெரும்பாலான சரும பராமரிப்பு பொருட்களில் பப்பாளியின் நன்மைகள் அடங்கியிருக்கிறது.  இதில் பப்பைன் என்னும் பொருள் இருப்பதால் சரும பிரச்னைகளை போக்கி, வயது முதிர்ச்சியை போக்குகிறது.  பப்பாளியை அப்படியே சாப்பிட்டு வரலாம்.  அல்லது அதன் விழுதை சருமத்தில் தடவி வரலாம்.  நல்ல பலன் தரும்.  .

4. ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலியில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-ஏஜிங் தன்மையும் இருக்கிறது.  இதில் வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து போன்றவை இருப்பதால் எலும்புகள் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது.  

4d8pl6cg

5. கீரைகள்:

கீரைகளில் வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இருக்கின்றன.  உடல் எடை குறைக்க கீரைகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.  கீரைகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.  

.