காதலனை கரம் பிடித்தார் நடிகை பிரியங்கா சோப்ரா - கிறிஸ்தவ முறைப்படி திருமணம்

இந்து மத முறைப்படி நிக் ஜோன்சுக்கும் - பிரியங்கா சோப்ராவுக்கும் நாளை திருமணம் நடைபெறவுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
காதலனை கரம் பிடித்தார் நடிகை பிரியங்கா சோப்ரா - கிறிஸ்தவ முறைப்படி திருமணம்

நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோன்சும்.


New Delhi: 

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, காதலன் நிக் ஜோன்சை இன்று திருமணம் முடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அரண்மனையில் அவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி கோலாகலமாக நடந்துள்ளது. நாளை இந்து மத முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது.

இந்தி நடிகையான பிரியங்கா சோப்ரா இந்தி திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார். தமிழில் விஜயுடன் தமிழன் என்ற படத்தில் பிரியங்கா நடித்திருக்கிறார். பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகை என்ற பெயர் எடுத்த பின்னர் ஹாலிவுட் படங்களிலும், தொடர்களிலும் அவர் நடித்தார். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 

 

இந்நிலையில் அவருக்கும் பாப் பாடகர் நிக் ஜோன்சுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு வீட்டாரும் பேசி நிச்சயதார்த்தத்தை முறைப்படி முடித்தனர். இந்த நிலையில் ஜோத்பூர் அரண்மனையில் இருவரின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

 

9nko3h8o
 

அரண்மனைக்கு இரு வீட்டாரும் கடந்த வியாழன் அன்று வந்துள்ளனர். சல்மான் கானின் சகோதரி ஆர்பிதா, அவரது மகன் ஆகிலுடன் வெள்ளிக்கிழமை காலை வந்தார். தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி ஆகியோர் மகள் இஷா, மகன் ஆனந்துடன் வந்தனர். அவர்களை தவிர்த்து முக்கிய பிரபலங்கள் பலர் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். இதற்கிடையே இந்துமத முறைப்படி நாளை இருவருக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................