This Article is From Jul 01, 2019

கத்திக் குத்தப்பட்டு இறந்த கர்ப்பிணிப் பெண்: குழந்தையின் நிலை கவலைக்கிடம்

மருத்துவர்கள் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர் குழந்தையும் ஆபத்தான நிலையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கத்திக் குத்தப்பட்டு இறந்த கர்ப்பிணிப் பெண்: குழந்தையின் நிலை கவலைக்கிடம்

தெற்கு லண்டனின் குரோய்டோனில் உள்ள குடியிருப்பில் காவல்துறைக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.

LONDON:

தெற்கு லண்டனில் எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணை குத்தி கொலை செய்த வழக்கில் காவல்துறை இருவரை கைது செய்துள்ளது. காவல்துறையினர் இதை “கொடூரமான கொலைத்தாக்குதல்” என்று கூறுகின்றனர்.

தெற்கு லண்டனின் குரோய்டோனில் உள்ள குடியிருப்பில் காவல்துறைக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. ஒரு வீட்டில் கர்ப்பிணிப் பெண் கத்தி குத்து காயங்களுடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. .

26 வயதான கெல்லி மேரி ஃபவ்ரெல்ல கத்திக் குத்துக் காயத்துடன் ஹார்ட் அட்டாக்  சேர்ந்து வர இறந்துள்ளார். அந்தப் பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்ததாக தெரிகிறது. மருத்துவர்கள் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர் குழந்தையும் ஆபத்தான நிலையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

இந்த கொலைக்கு காரணமான 37 வயது மிக்க ஆண் ஒருவரையும் மற்றும் 29 வயதுள்ள ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளது. காவல்துறையினர் இருவரின் பெயரையும் குழந்தையின் பாலினம் குறித்தும் எந்தவொரு தகவலும் வெளிப்படுத்தவில்லை. 

கொலைக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. 

.