சீனாவிலிருந்து லண்டனுக்கு இடம்பெயருகின்றதா டிக்டாக்!

முன்னதாக பிரிட்டனில் உலகளாவிய தலைமையகத்தைத் திறக்க இங்கிலாந்து அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை டிக்டாக் முறித்துக் கொண்டதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து லண்டனுக்கு இடம்பெயருகின்றதா டிக்டாக்!

டிக்டோக் கடந்த சில மாதங்களாக இங்கிலாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருகிறது.

London:

சமீபத்தில் சீனா மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. சீன நிறுவனங்களின் இணைய பாதுகாப்பு குறித்து இந்நாடுகள் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் லடாக்கின் கிழக்குப் பகுதியான கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததையடுத்து மத்திய அரசு டிக்டாக் உட்பட சீனாவின் 59 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது டிக்டாக் தனது தலைமையகத்தை சீனாவிலிருந்து லன்டனுக்கு மாற்ற முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும், அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து அரசிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதே போல மற்றொருபுறம் கலிபோர்னியாவில் தனது கிளையை டிக்டாக் மிக சமீபத்தில் திறந்துள்ளது. மேலும், முன்னாள் வால்ட் டிஸ்னி கோ நிர்வாகி கெவின் மேயரை டிக்டோக்கின் தலைமை நிர்வாகியாக டிக்டாக் நியமித்துள்ளது.

பயனர்களின் தரவை மாற்ற சீனா நிறுவனத்தை கட்டாயப்படுத்தக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் டிக்டோக் வாஷிங்டனில் கடுமையான ஆய்வை எதிர்கொள்கிறது. டிக்டோக் சீனாவை தளமாகக் கொண்ட பைட் டான்ஸுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தற்போது சந்தித்து வரும் பிரச்னைகளில் டிக்டாக் கவனம் செலுத்தி வருகின்றது.

முன்னதாக பிரிட்டனில் உலகளாவிய தலைமையகத்தைத் திறக்க இங்கிலாந்து அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை டிக்டாக் முறித்துக் கொண்டதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இருப்பினும் பேச்சு வார்த்தை தொடர்ந்து வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)