This Article is From Jun 13, 2019

அதிரடி சண்டை காட்சிகளுடன் 'பாகுபலி' பிரபாஸ் நடிக்கும் 'சாஹோ' படத்தின் டீசர் வெளியீடு!

தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் சாஹோ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் சாஹோ டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அதிரடி சண்டை காட்சிகளுடன் 'பாகுபலி' பிரபாஸ் நடிக்கும் 'சாஹோ' படத்தின் டீசர் வெளியீடு!

சாஹோ திரைப்படத்தில் பிரபாஸ்

New Delhi:

பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சாஹோ' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி ஆக்சன் நிறைந்திருக்கும்  படத்தின் டீசர் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

பாகுபலி 1, 2 -ன் மாபெரும் வெற்றிக்கு பின்னர் பிரபாஸ் நடித்திருக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை ஸ்ரத்தாக கபூர் நடித்துள்ளார்.
 

சாஹோ திரைப்படத்தின் டீசர்:


பாகுபலி 2-க்கு பின்னர் பிரபாஸையும், அனுஷ்காவையும் இணைத்து செய்திகள் பரவின. பிரபாஸின் அடுத்த படத்தில் அனுஷ்கா ஜோடியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரத்தா கபூர் படத்தில் புக் செய்யப்பட்டார். காதல் - ஆக்சனாக படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் கென்னி பேட்ஸ் இந்த படத்தில் சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

டீசரை பொறுத்தளவில் ஆக்சன் காட்சிகள் மட்டுமே நிறைந்திருக்கின்றன. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் படம் வெளியாகவுள்ளது. ஆகஸ்ட் 15-ம்தேதி சாஹோ திரைக்கு வருகிறது. 

சாஹோவை சுஜித் இயக்கியிருக்கிறார். பிரபாஸ், ஸ்ரத்தாவை தவிர்த்து மந்திரா பேடி, ஜாக்கி ஷரோப், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

.