This Article is From Feb 08, 2020

'டெல்லியில் ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி' - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!!

மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மிக்கு 49 இடங்கள் வரை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த 2015-ல் அக்கட்சி பெற்ற 67 இடங்களைக் காட்டிலும் 18 தொகுதிகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

'டெல்லியில் ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி' - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!!

ஆம் ஆத்மி ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

New Delhi:

டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 

மொத்தம் உள்ள 70 இடங்களில் அக்கட்சிக்கு 49 இடங்கள் வரை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த 2015-ல் அக்கட்சி பெற்ற 67 இடங்களைக் காட்டிலும் 18 தொகுதிகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவை பொறுத்தளவில் 20 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. 

கடந்த தேர்தலில் எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறாத காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் ஒரு தொகுதி கிடைக்க வாய்ப்புள்ளது. 

பல நேரங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலிக்காமலும் போயுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

டெல்லியில் பெரும்பான்மை பெறுவதற்கு ஒரு கட்சிக்கு 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 

டைம்ஸ் நவ் 44 இடங்கள் ஆம் ஆத்மிக்கும், 26 இடங்கள் பாஜகவுக்கும் கிடைக்கும் என்றும், நியூஸ் எக்ஸ் ஆம் ஆத்மிக்கு 53 - 57 வரையிலும், பாஜகவுக்கு 11 - 17 இடங்கள் வரையிலும் கிடைக்கும் என்று கணித்துள்ளது. 

20 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் பாஜகவினர் இருந்தனர். அதனை ஆம் ஆத்மி தகர்க்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன. 

கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து டெல்லியில் பிரமாண்ட அளவில் போராட்டங்கள் நடந்தன. இந்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரானது என்றும் கூறப்பட்டது. 

இந்த சூழலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

2015-ல் மொத்தம் பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மிக்கு 54.3 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 32 சதவீத வாக்குகளும், காங்கிரசுக்கு 9.6 சதவீத வாக்குகளும் கிடைத்தன. 

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களில் வெற்றி பெற்றது. முன்னதாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது, அக்கட்சி எம்எல்ஏக்கள் மற்ற கட்சிகளில் சேர்ந்த வகையில் 6 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது மற்றும் இடைத் தேர்தல் ஆகியவற்றால் பாஜகவிடம் பெரும்பான்மை இழந்திருந்தது. இதையடுத்து நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி வரலாறு காணாத வெற்றியை பெற்றது. 

.