This Article is From Aug 10, 2020

நாடு முழுவதும் 8 கோடி விவசாயிகளுக்கு 17,100 கோடி நிதியை வழங்கினார் பிரதமர் மோடி!

ஊழலைத் தடுப்பதற்கும் விவசாயிகளுக்கு வசதியை அதிகரிப்பதற்கும் இந்த நிதி நேரடியாக ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மாற்றப்படுகிறது.

நாடு முழுவதும் 8 கோடி விவசாயிகளுக்கு 17,100 கோடி நிதியை வழங்கினார் பிரதமர் மோடி!

ஹைலைட்ஸ்

  • 8.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ .17,100 கோடி
  • 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டத்தின் ஆறாவது தவணையின் ஒரு பகுதியாகும்
  • விவசாயிக்கும் ஆண்டுக்கு, 6,000 ரூபாயை மத்திய அரசு நிதியுதவியாக வழங்குகிது

பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மா நிர்பர் பாரத்தின் (தற்சார்பு இந்தியா) திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக 101 ராணுவ தளவாட பொருட்களை இறக்குமதி செய்வதை பாதுகாப்பு அமைச்சகம் நிறுத்தும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, பிரதமர்-கிசான் திட்டத்தின் ஒரு பகுதியாக 8.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.17,100 கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தற்போது தெரிவித்துள்ளார்.

இந்த தொகை 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டத்தின் ஆறாவது தவணையின் ஒரு பகுதியாகும். வேளாண் தொழில்முனைவோர், தொடக்க நிறுவனங்கள், வேளாண் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் உழவர் குழுக்களுக்கு அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை மற்றும் பண்ணை சொத்துக்களை வளர்ப்பதற்கான நிதி வசதி தொடங்கப்பட்டபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பு மற்றும் சமுதாய விவசாய சொத்துக்களான குளிர் சேமிப்பு, சேகரிப்பு மையங்கள், செயலாக்க அலகுகள் போன்றவற்றை உருவாக்குவதற்கு ஊக்கமளிப்பதற்காக புதிய விவசாய உள்கட்டமைப்பு நிதிக்கு ரூ .1 லட்சம் கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.

PM-KISAN திட்டத்தின் கீழ், ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு, 6,000 ரூபாயை மத்திய அரசு நிதியுதவியாக வழங்கி வருகிறது.

2018 டிசம்பரில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜ்னா (பி.எம்-கிசான்) திட்டத்தின்படி, ரூ. 9.9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு 75,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ஊழலைத் தடுப்பதற்கும் விவசாயிகளுக்கு வசதியை அதிகரிப்பதற்கும் இந்த நிதி நேரடியாக ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மாற்றப்படுகிறது.

.