This Article is From Feb 24, 2020

எல்லோரும் அவரை நேசிக்கிறார்கள், ஆனால் அவர் மிகவும் கடினமானவர்-டிரம்ப்

பிரதமர் மோடி தனது அறிமுகக் கருத்துக்களில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்க மூன்று முறை "நமஸ்தேஇ டிரம்ப்" என்றார். மக்கள் நிறைந்த அரங்கம் வார்த்தைகளை எதிரொலித்தது.

US President Donald Trump meets with Prime Minister Narendra Modi

Ahmedabad:

இன்று அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் பெரும் கூட்டத்தின் நடுவே பேசிய டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியைத் தனது சிறந்த நண்பர் என்று வர்ணித்து, “அவர் ஒரு சிறந்த தலைவர். ஆனால், அவர் மிகவும் கடினமானவர்.” என்று கூறியிருந்தார். அமெரிக்கப் பிரதமர் டொனால்ட் ட்ரம்ப் 36 மணி நேரச் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்த நிலையில் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு கூறினார். இந்தியா, மனிதக்குலம் அனைவருக்கும் நம்பிக்கையளிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

அமெரிக்கா இந்தியாவை நேசிக்கின்றது. அமெரிக்கா இந்தியாவை மதிக்கின்றது என்கிற செய்தியைச் சொல்வதற்கு நானும் மெலானியாவும் உலகம் முழுவதும் 8000 மைல்களை பயணித்திருக்கின்றோம் என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருக்கிறார். . 

"கடந்த 7 தசாப்தங்களில் இந்தியாவின் எழுச்சி குறிப்பிடத்தக்க தாக உள்ளது ... கடந்த இரண்டு தசாப்தங்களில் அது வளர்ந்த வேகம் தனித்துவமானது. இந்திய மக்கள் உலகின் பிற பகுதிகளுக்கு ஒரு உத்வேகம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக “நமஸ்தே இந்தியா” என்று அவர் தனது உரையைத் தொடங்கினார். மேலும், தனது சிறப்பான நண்பரான மோடிக்கு நன்றியும் தெரிவித்தார். ஒரு கட்டத்தில் பிரதமர் இந்த நகரத்தின் தேநீர் விற்பனையாளரின் மகன். ஆனால், தற்போது அவர் உயரத்திற்கு வளர்ந்திருக்கிறார். அவர் ஒரு பெரிய மனிதர். அவர் கடினமான பேச்சுவார்த்தையாளர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். 

பிரதமர் மோடி தனது அறிமுகக் கருத்துக்களில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்க மூன்று முறை "நமஸ்தேஇ டிரம்ப்" என்றார். மக்கள் நிறைந்த அரங்கம் வார்த்தைகளை எதிரொலித்தது. ரூ .800 கோடி செலவில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய மோட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் மேடையில் இரு தலைவர்களும் இரண்டாவது முறையாகக் கட்டியணைத்துக்கொண்டனர்.

"இந்தியா அமெரிக்க உறவு இனி மற்றொரு கூட்டாண்மை அல்ல. இது இப்போது மிகப் பெரிய நெருக்கமான உறவாகும்" என்று பிரதமர் கூறினார்.

"ஐந்து மாதங்களுக்கு முன்பு ஹூஸ்டனுக்கு ஒரு வரலாற்று வருகைக்கு நான் அழைக்கப்பட்டேன் அங்கு 'ஹவுடி மோடி!' என்ற ஒரு நிகழ்ச்சி இருந்தது ... இன்றி அகமதாபாத்திற்கு ஒரு வரலாற்று வருகைக்காக அவர் இங்கு வந்துள்ளார் அங்கு அவரை 'நமஸ்தே டிரம்ப்' வரவேற்றார் '. "

ட்ரம்ப்பின் வருகை இந்தியா-அமெரிக்க உறவுகளின் முக்கியத்துவத்தையும் நெருக்கத்தையும் காட்டுகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

1.1 லட்சம் மக்கள் கொள்ளளவு கொண்ட இந்த மைதானம் முழுக்க ரசிகர்களால் நிரம்பியிருந்தது. வருகையின் போது சிலர் நடனமாடி அவர்கள் வருகையினை கொண்டாடினர். தனது மனைவி மெலானியாவுடன் சபர்பமதி ஆசிரமத்திற்குச் சென்ற பின் அங்கிருந்து தனது பாதுகாப்பு வாகனமான பீஸ்டில் அவர் மைதானத்தினை வந்தடைந்தார்.

ட்ரம்ப் முன்னதாக சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையைச் சுழற்றப் பழகினார். முன்னதாக ட்ரம்ப் வருவதையொட்டி பிரதமர் அவரை நேரில் சந்திக்கச் சென்றிருந்தார். தனது தனி விமான ஏர் போர்ஸ் ஒன் விமானத்திலிருந்து வெளிவந்தவுடன் அவரை வரவேற்கப் பல நாட்டுப்புற கலைஞர்கள் சிறப்பான வருகையை அளித்திருந்தனர். ட்ரம்ப்பின் வருகையையொட்டி இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் நம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என சில வணிக நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

.