This Article is From Jun 17, 2020

'லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த வீரர்களின் தியாகம் வீண் போகாது'' - பிரதமர் மோடி

நேற்று முன்தினம் இரவு  தொடங்கிய மோதலில் இந்தியா - சீனா என இரு நாட்டு படைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.  சீனா தரப்பில் உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

'லடாக் எல்லையில் வீர  மரணம் அடைந்த வீரர்களின் தியாகம் வீண் போகாது'' - பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • ராணுவ வீரர்கள் தியாகம் வீண்போகாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்
  • லடாக்கில் உயிர் நீத்த வீரர்களுக்காக 2 நிமிட மவுன அஞ்சலி செய்யப்பட்டது
  • வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது
New Delhi:

லடாக் எல்லையில் சீனாவுக்கு எதிரான சண்டையில் உயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது என்றும், இந்திய அமைதியை விரும்புகிறது.  ஆனால், எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் சக்தி கொண்ட நாடு என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடனான கூட்டத்தை பிரதமர் மோடி நடத்தி வருகிறார்.  இன்றைய அமர்வில் தமிழகம்,  டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா போன்ற கொரோனா பாதிப்ப அதிகம் கொண்ட 15 மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். 

இந்த கூட்டத்தின்போது, லடாக் எல்லையில் உயிர் நீத்த 20 வீரர்களுக்காக  2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இதன்பின்னர் பேசிய பிரதமர் மோடி, 'லடாக் எல்லையில் உயிர் நீத்த 20 இந்திய  வீரர்களின் தியாகம் வீண் போகாது. இந்தியா அமைதியை விரும்பும் நாடு.  எங்களை யாரும் சீண்டினால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் சக்தி எங்களுக்கு உண்டு' என்று கூறினார். 

லடாக் எல்லையில் சீனாவுடன் ஏற்பட்டிருக்கும் மோதல் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த  கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழ்ந்தனர்.  

நேற்று முன்தினம் இரவு  தொடங்கிய மோதலில் இந்தியா - சீனா என இரு நாட்டு படைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.  சீனா தரப்பில் உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உயிரிழந்தவர்களில் இருப்பினும் ராணுவ கர்னல்  சந்தோஷ் பாபு, ஹவில்தாரான தமிழகத்தை சேர்ந்த பழனி உள்ளிட்டோர் அடங்குவர். 

ஜீரோ டிகிரி மற்றும் அதற்கு குறைவான வெப்பநிலை கொண்ட பகுதியில் நடைபெற்ற இந்த சண்டையின்போது துப்பாக்கிகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை என்றும் கற்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் சீன ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் சீனா உடனான மோதல் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். எல்லை மோதல் குறித்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.

.